பாரதியார் பல்கலையில் 75 சதவீத அலுவலர் பணியிடங்கள் காலி! | Kalvimalar - News

பாரதியார் பல்கலையில் 75 சதவீத அலுவலர் பணியிடங்கள் காலி!ஜனவரி 18,2019,11:09 IST

எழுத்தின் அளவு :

கோவை:பாரதியார் பல்கலையில் அலுவலர்களுக்கான, 75 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.பாரதியார் பல்கலை., யில், ஆண்டுதோறும் பணி ஓய்வு பெறுபவர்களால், காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2007ம் ஆண்டுக்குப் பின், ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடம் நிரப்பப்படவில்லை.

இதனால், தொழில்நுட்ப பணியாளர், 10, உதவி தொழில் நுட்ப பணியாளர் 12, உதவியாளர்கள் 68, ஓட்டுனர் 8, அலுவலக உதவியாளர், 45 உள்ளிட்ட, அரசால் அனுமதிக்கப்பட்ட, 270 பணியிடங்களில், 205 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கு, மாறாக தினக்கூலி அடிப்படையில், 400 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பாமல், அன்றாட சம்பளம் அடிப்படையில் பணி நியமனம் செய்வதால், ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் பல்கலைக்கு இழப்பு ஏற்படுகிறது.

பல்கலை பதிவாளர் (பொறுப்பு) வனிதா கூறுகையில், கடந்த பத்தாண்டாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன் என்று தெரியவில்லை. அண்ணா பல்கலை சிக்கலுக்குப்பின்பு, புதிய பணி நியமனத்துக்கு அரசு தடை விதித்தது; தற்போது இத்தடை தளர்த்தப்பட்டுள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப வாய்ப்பு அதிகமுள்ளது,&'&' என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us