தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பயோ மெட்ரிக் வருகை பதிவு! | Kalvimalar - News

தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பயோ மெட்ரிக் வருகை பதிவு!ஜனவரி 12,2019,11:31 IST

எழுத்தின் அளவு :

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கல்வித் துறை ஊழியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் பணி வருகை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.

தற்போது பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் முறை உள்ளது. இந்த முறையில், கையெழுத்து போட்டு விட்டு பணி நேரத்தில் அலுவலக வேலையாக செல்வதாகக் கூறி சொந்த வேலைக்கு ஆசிரியர்கள் செல்வதாக புகார் எழுந்தது.அதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் பணி வருகையை கண்காணிக்க வசதியாக பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதற்கான, ஆயத்தப் பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது.

கடலுார் மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார தொடக்கக் கல்வி அலுவலக ஊழியர்கள் மற்றும் 205 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 6,000 பேருக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட உள்ளது.இதற்காக, முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் பெயர், ஆதார் எண், மொபைல் எண், போட்டோ, பிறந்த தேதி, மெயில் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் கல்வித் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, அந்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரின் இ மெயில் முகவரிக்கு அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு, பயோ மெட்ரிக் முறையி்ல் வருகை பதிவு செய்யும் பணி இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், &'பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்வதால், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் செல்ல முடியாது. அப்படியே சென்றாலும் அதற்கான காரணம் பதிவு செய்யப்படும். பணியில் உள்ளவர்களின் விவரங்களை அதிகாரிகள் எங்கிருந்தபடியும் கண்காணிக்க முடியும்&' என்றார்.

கடலுாரில், பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கூட்டம் முதன்மைக் கல்வி அதிகாரி பழனிசாமி தலைமையில் நேற்று, நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் கடலுார் செல்வராஜ், சிதம்பரம் சாமி முத்தழகன், வடலுார் திருமுருகன், விருத்தாசலம் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பயோ மெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்தும் விதம் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 பயோ மெட்ரிக் வருகை பதிவு இயந்திரம் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us