போட்டித் தேர்வுகளில் 567 பேர் வெற்றி | Kalvimalar - News

போட்டித் தேர்வுகளில் 567 பேர் வெற்றிஜனவரி 12,2019,11:21 IST

எழுத்தின் அளவு :

மதுரை: &'&'மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி பெற்ற 567 பேர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்,&'&' என, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு துவக்க விழாவில் கலெக்டர் நடராஜன் பேசினார்.

அவர் பேசியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 653 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் தயாராக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது.

இதுவரை பயிற்சி பெற்ற 567 பேர் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் போட்டி

தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். 2018ல் மட்டும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 34 பேர் வெற்றி பெற்றனர். வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்கப்படுகிறது.

வேலை தேடுவோர் திறனை மேம்படுத்திட திறன் பயிற்சியளிக்கப்படுகிறது என்றார்.

மண்டல இணை இயக்குனர் சந்திரன், துணை இயக்குனர் மகாலட்சுமி, உதவி இயக்குனர் ராமநாதன், வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், சி.எஸ்.ஐ., கலை அறிவியல் பெண்கள் கல்லுாரி முதல்வர் ஜெஸி பாலின் ஜெயப்பிரியா பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us