குரூப் - 1 இலவச பயிற்சி நாளை துவக்கம் | Kalvimalar - News

குரூப் - 1 இலவச பயிற்சி நாளை துவக்கம்ஜனவரி 12,2019,11:20 IST

எழுத்தின் அளவு :

சென்னை:செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில், குரூப் - 1 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு, நாளை துவங்குகிறது.


தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுமம், &'குரூப் - 1 தேர்வு, மார்ச், 3ம் தேதி நடக்கும்&' என, அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து, வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள, செங்கல் வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில், நாளை, இலவச அறிமுக வகுப்பு துவங்குகிறது. வாரம் முழுவதும், வகுப்புகள் நடத்தப்படுவது மட்டுமல்லாமல், சனிக்கிழமைகளில் மட்டும், மாதிரி தேர்வுகள் நடத்த உள்ளனர்.


இந்த பயிற்சி வகுப்பை, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி,தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மை செயலர், ஜவஹர் நடத்த உள்ளார்.விருப்பமுள்ளோர், நாளை காலை, 10:30 மணிக்குள், நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண், 044 - 2643 0029 மற்றும் 86680 38347 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us