வேளாண் பல்கலை பணி நியமனம்: 3 நாளில் பட்டியல் | Kalvimalar - News

வேளாண் பல்கலை பணி நியமனம்: 3 நாளில் பட்டியல்ஜனவரி 12,2019,11:15 IST

எழுத்தின் அளவு :

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பதிவாளர் உள்ளிட்ட, 27 முக்கிய பதவிகளுக்கான நிரந்தர பொறுப்பாளர்களாக தேர்வு பெற்றவர்களின் பட்டியல், மூன்று நாட்களில் வெளியாகிறது.

வேளாண் பல்கலையில், 2012ம் ஆண்டு முதலே, இப்பல்கலையின் முக்கிய பொறுப்புகள், பேராசிரியர்கள் வசம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டிருந்தன. தற்போது, புதிய பொறுப்பாளர்கள் தேர்வுப் பணி முழுமையாக முடிக்கப்பட்டு, இறுதி பட்டியல், தயார் நிலையில் உள்ளது.மொத்தம், 27 பதவிகளுக்கு, 139 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9, 10ம் தேதியில் நடந்த நேர்காணலில் அனைவரும் பங்கேற்றனர்.

பல்கலை வரலாற்றிலேயே முதல் முறையாக, நேர்காணலில் பங்கேற்றவர்களின் மதிப்பெண், சம்பந்தப்பட்டவர்களுக்கு காண்பிக்கப்பட்டு, கையெழுத்தும் பெறப்பட்டது. இத்தகைய வெளிப்படைத்தன்மை, பேராசிரியர்கள் தரப்பில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணைவேந்தர் குமார் கூறியதாவது:காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் இருந்ததால், அங்கீகாரம் தொடர்பான சில சிக்கல்கள் இருந்தன. இதை சரி செய்யும் வகையில், பணி துரிதப்படுத்தப்பட்டது. பல்வேறு பிரிவுகளில், பேராசிரியர்களின் தகுதி, 85 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், அவரவர் பெற்ற மதிப்பெண் காண்பிக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது.

மேலும், நேர்காணலுக்கு, 15 மதிப்பெண் என, மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்தோம். 

வேளாண் துறை செயலர், பிற பல்கலை துணைவேந்தர், எஸ்.சி., - எஸ்.டி., உறுப்பினர் என, ஐந்து பேர் கொண்ட குழு வாயிலாக, தகுதியான நபர்களை, எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் தேர்வு செய்துள்ளோம்.ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பீட்டின் அடிப்படையில், துறைகளுக்கு ஏற்றவாறு, தரப்பட்டியல் வெளியிடப்படும். மூன்று நாட்களில், முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us