பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மேம்பாட்டு திட்டம் நிறுத்தம் | Kalvimalar - News

பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மேம்பாட்டு திட்டம் நிறுத்தம் ஜனவரி 12,2019,11:00 IST

எழுத்தின் அளவு :

கோவை : போதுமான நிதி இல்லாததால், பாலிடெக்னிக் கல்லுாரி சமூக மேம்பாட்டு திட்டம் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை சார்பில், &'சமூக மேம்பாட்டு திட்டம்&', நாடு முழுவதும், 1,149 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பள்ளியில் இடைநின்றோர், விதவைகள், ஆதரவற்றோர், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, மத்திய அரசு, 20 லட்சம் ரூபாய் வரை வழங்கியது. 

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், மொபைல் போன் பராமரிப்பு, அழகு கலை உள்ளிட்ட சில பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டன. இம்மையம் வாயிலாக ஆண்டுக்கு, 700 முதல், 1,200 பேர் வரை பயிற்சி பெற்று தொழில் துவங்குவர். பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு, மத்திய அரசு சான்றிதழ் வழங்குவதோடு, வங்கி கடனுக்கு வழிவகை செய்து கொடுத்தது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், இரு ஆண்டுகளாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சந்திரனிடம் கேட்டபோது, &'&'மத்திய அரசின் நிதி கிடைத்ததும், பயிற்சியை மீண்டும் துவக்குவோம்,&'&' என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us