குரூப் 1 தேர்வில் வயது வரம்பு தளர்த்தப்படுமா | Kalvimalar - News

குரூப் 1 தேர்வில் வயது வரம்பு தளர்த்தப்படுமாஜனவரி 12,2019,10:58 IST

எழுத்தின் அளவு :

மதுரை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு தேதியால் கடந்த 37 ஆண்டுகளாக இத்தேர்வுக்காக படித்து வருபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயதுவரம்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 35 ஆக இருந்தது. கடந்தாண்டு ஜூன் 1ல் அதிகபட்ச வயது வரம்பு 37 ஆக அதிகரித்து சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதனால் 35 வயதை கடந்த போட்டியாளர்கள் உற்சாகமாகி போட்டி தேர்வுக்கு தயாராயினர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 1 தேர்வு அறிவிக்கப்படாததால், மற்ற தேர்வுகளில் கவனம் செலுத்தினர். இந்நிலையில் இந்தாண்டு ஜன.,1ல் குரூப் 1 தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. அதில் அதிகபட்ச வயது வரம்பிற்கான &'கட் ஆப்&' தேதி 1.7.19 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் 37 வயதை நெருங்கியுள்ள போட்டியாளர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: பொதுப்பிரிவில் 1.7.1987 க்கு முன்னரும், இதர பிரிவில் 1.7.1982 க்கு முன்னரும் பிறந்தவர்கள் முதல்நிலை தேர்வு நடக்கும் 3.3.19 அன்று அதிகபட்ச வயது வரம்பு நிறைவு பெறாமல் இருப்பதால் நாங்கள் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக எங்களில் ஒருவர் 1.7.19 அன்று 37 வயதை கடக்கிறார். 

ஆனால் தேர்வு மார்ச்சில்தான் நடக்கிறது. ஆன்லைனில் விண்ணப்பித்த போது ஏற்கவில்லை. 1.7.19ஐ கணக்கில் எடுத்துக்கொள்வதால் பெரும்பாலானோர் விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us