இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | Kalvimalar - News

இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குஜனவரி 11,2019,13:07 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட திருத்தம்:

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், பொதுப் பிரிவில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறி உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து, சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பு மற்றும் டாக்டர் கவுசால் காந்த் மிஸ்ரா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது, சட்ட விரோதமானது. &'இட ஒதுக்கீட்டின் அளவு, 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது&' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த, 1973ல், உச்ச நீதிமன்றத்தின், 13 நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, &'இட ஒதுக்கீட்டில் திருத்தங்களை மேற்கொள்ள பார்லிமென்டுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடாது&' என, கூறியுள்ளது.

தடை:

அதன்படி, தற்போது அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது. அதனால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, தெரிகிறது.

Advertisement

வாசகர் கருத்து

Appo yezhai parambaraikku vidive kidayaathaa
by chennai sivakumar,India    12-ஜன-2019 10:09:04 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us