சுற்றுச்சுவர், வகுப்பறைகள் வேண்டும்; பெற்றோர் கோரிக்கை | Kalvimalar - News

சுற்றுச்சுவர், வகுப்பறைகள் வேண்டும்; பெற்றோர் கோரிக்கைஜனவரி 11,2019,13:00 IST

எழுத்தின் அளவு :

கும்மிடிப்பூண்டி: கம்மார்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவரும், கூடுதல் வகுப்பறைகளும் வேண்டும் என, கிராம மக்களும், பெற்றோரும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அருகே, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார்பாளையம் கிராமத்தில், சாலையோரம் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், 70 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால், சாலையை ஒட்டியபடி ஓடி விளையாடும் குழந்தைகள், விபத்தை சந்திக்க நேரிடும் என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.அதனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

மூன்று வகுப்பறை கொண்ட ஒரு கட்டடம் மட்டுமே அந்த பள்ளியில் இருப்பதால், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அமர வைத்து பாடம் எடுக்கப்படுகிறது. அதனால், இட நெருக்கடி, கவனச் சிதறலால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலும், இட நெருக்கடியான வகுப்பறைகளும், அந்த பள்ளியின், மாணவர் சேர்க்கையை பாதிக்கிறது என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமப்புற மாணவர்களின் தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, போதிய இடம் ஒதுக்கி, கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடமும், பாதுகாப்பு கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவரும் அமைக்க வேண்டும் என, கம்மார்பாளையம் கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us