அறிவியல் மாநாட்டில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு | Kalvimalar - News

அறிவியல் மாநாட்டில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுஜனவரி 10,2019,11:57 IST

எழுத்தின் அளவு :


புதுச்சேரி: தேசிய அறிவியல் மாநாட்டில் சாதித்த மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை, பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு பாராட்டினார்.புதுச்சேரி அறிவியல் இயக்கம் புதுச்சேரி பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து, கடந்த 26 ஆண்டுகளாக குழந்தைகள் அறிவியல் மாநாடு, பஞ்சாப்பில் அறிவியல் மாநாடு நடத்தி வருகிறது.

அண்மையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.இதில், புதுச்சேரியிலிருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் ஆய்வு படைப்புகளுடன் பங்கேற்று, சான்றிதழ் பெற்றனர்.புதுச்சேரி அறிவியல் இயக்க துணைத் தலைவர் ஹேமாவதி, பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், செயலர்கள் சந்திரசேகர், அருண் ஆகியோர் ஒருங்கிணைத்து இருந்தனர்.தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் சாதித்த மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு பாராட்டினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us