30 ஆயிரம் பங்கேற்பாளர்களுடன் நடந்து முடிந்த ஐ.எஸ்.சி., - 2019 | Kalvimalar - News

30 ஆயிரம் பங்கேற்பாளர்களுடன் நடந்து முடிந்த ஐ.எஸ்.சி., - 2019ஜனவரி 08,2019,13:00 IST

எழுத்தின் அளவு :

பிரதமரால் ஜனவரி 3ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஐந்து நாள் அறிவியல் கண்காட்சியும் 106வது இந்திய அறிவியல் மாநாடுமான ஐ.எஸ்.சி - 2019 (இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ்) பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘லவ்லி புரபஷ்னல் யூனிவர்சிட்டி’ கல்வி நிறுவனத்தில் நடந்து முடிந்தது.

‘எதிர்கால இந்தியா; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்கிற தலைப்பை மையமாகக் கொண்டு ஜனவரி 3 தொடங்கி 7ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, 4 மத்திய அமைச்சரவை மந்திரிகள், 3 நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்கள், ஆளுநர்கள், மாநில மந்திரிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு அறிவியல் துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் எனப் பலர் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டனர்.  

இளம் ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இந்த மாநாடு நடைபெற்ற 5 நாட்களிலும் நோபல் பரிசு பெற்றவர்கள், டி.ஆர்.டி.ஓ., இஸ்ரோ, டி.எஸ்.டி., ஐகேர், சி.எஸ்.ஐ.ஆர்., ஐ.சி.எம்.ஆர்., ஏ.ஐ.சி.டி.இ., நாக், யு.ஜி.சி., ஐ.எஸ்.சி.ஏ., உயர் அதிகாரிகளுடன் அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள் என பலர் கருத்தரங்கில் விரிவுரையாளர்களாக இருந்து தங்களது அறிவியல் சார்ந்த பல்வேறு கருத்துகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

ஐந்து நாட்களாக அறிவியல் விருந்து படைத்த இந்த கண்காட்சியில் பங்குபெற்ற அனைவரும் மிகவும் சிறப்பாகவும், பயன் மிக்கதாகவும் இது நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி மகிழ்ந்தனர். விழாவின் முடிவில் இளம் விஞ்ஞானிகள், சிறந்த ‘போஸ்டர் டிசைனர்’ மற்றும் இந்திய அறிவியல் கண்காட்சியின் பெருமை ஆகிய பிரிவுகளில் 37 விருதுகள் வழங்கப்பட்டன. இதுபோன்ற நிகழ்வின் மூலம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதோடு இளம் மாணவர்களின் அறிவியல் பங்களிப்புகளையும் அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us