இந்தியாவிலேயே சிறந்த பைலட் பயிற்சியை எங்கு பெறலாம் என கேட்டுள்ளீர்கள். ரேபரேலியில் உள்ள இந்திராகாந்தி ராஷ்ட்ரிய உதன் அகாடமியானது பைலட் பயிற்சியைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பயிற்சி நிறுவனமாகும். 17 வயது நிரம்பி +2 முடித்துள்ளவர்கள் 14 மாத கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பயிற்சியில் சேரலாம். இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களை +2ல் படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி நிறுவனம் எழுத்துத் தேர்வு, பைலட் ஆப்டிடியூட் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை மூலமாக இந்த நிறுவன பயிற்சியில் சேரலாம். தோராயமாக 20 லட்ச ரூபாயாக கட்டணம் செலுத்த வேண்டும்.