பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.அக்டோபர் 25,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் ஆகிய 2 துறைகளையும் இணைத்துத் தரப்படும் படிப்பு பயோமெடிக்கல் இன்ஜினியரிங் என்பதை அறியுங்கள். நோய்களை கண்டறிந்து மருத்துவ முறைகளை நிர்ணயிக்க நவீன இன்ஜினியரிங் உபகரணங்களை மருத்துவத் துறை பயன்படுத்துவதற்கு இப் பிரிவு வழிவகுக்கிறது. டாக்டர்கள், நர்சுகள், தெரபிஸ்டுகள்,டெக்னீசியன்கள், டிசைன் இன்ஸ்ட்ருமெண்ட் பயன்படுத்துவோர், மருத்துவ சாப்ட்வேர் தயாரிப்பவர் என பலரோடு இணைந்து பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவினர் பணி புரிகிறார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல் என பல பிரிவுகளின் நுட்பங்கள் இதில் பயன்படுகின்றன.

இதில் பயோஇன்ஸ்ட்ருமெண்டேஷன், பயோ மெக்கானிக்ஸ், பயோமெட்டீரியல், கிளினிகல் இன்ஜினியரிங், மெடிக்கல் இமேஜிங், ரீஹேபிலிடேஷன், டிஸ்யூ இன்ஜினியரிங், சிஸ்டம்ஸ் பிசியாலஜி என பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

+2 முடித்தபின் இத்துறையில் பி.இ./பி.டெக். படிப்பில் சேரலாம். இதன் பின் கேட் ஸ்கோர் பெற்று எம்.டெக். படிப்பில் சேரலாம்.

மருத்துவ ஆய்வு நிறுவனங்கள், அரசு மருத்துவக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், தொழில்

நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் இத் துறையில் படிப்புகளை முடிப்பவருக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் தற்போது கிடைக்கின்றன.

இத் துறை படிப்புகளை முடிப்பவருக்கு துவக்கத்திலேயே 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. தனியாருக்கு இன்சூரன்ஸ் துறை திறந்து விடப்பட்டபின் இத் துறையிலும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முடிப்பவருக்கு நல்ல வேலைகள் கிடைக்கின்றன.

இத் துறையில் படிப்புகளைத் தரும் நிறுவனங்களின் விபரங்கள் கீழே தரப்படுகின்றன:

All India Institute of Medical Sciences New Delhi Website : www.aiims.ac.in.

Dr. B.R. Ambedkar Centre of Biomedical Research University of Delhi New Delhi110007. www.du.ca.in.

 

Indian Institute of Technology-Bombay Powai, Mumbai400076, Maharashtra. www.iitb.ac.in.

 

Indian Institute of Technology, Kharagpur 721302, West Bengal.

www.iitkgp.ac.in

 

Banaras Hindu University, Institute of Technology, Varanasi221005, U.P. www.itbhu.ac.in

 

Anna University , Chennai 600025, Tamil Nadu.

 

Avinashilingam Institute for Home Science and Higher Education for Women

Coimbatore  641043, Tamil Nadu.

 

Osmania University Biomedical Instrumentation Centre, Hyderabad 500007, Andhra Pradesh.  www.bmeosmania.ac.in

 

Jadavpur University, Kolkata 700032 West Bengal.

 

Dwarkadas J. Sanghvi College of Engineering Mumbai400056, Maharashtra.

 

College of Engineering and Technology, Belgaum590008, Karnataka

 

Gujarat University, Ahmedabad 380009, Gujarat.

 

Manipal Institute of Technology, Manipal 576119, Karnataka.

 

Model Engineering College, Ernakulam, Kerala. 682021.

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us