இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள். | Kalvimalar - News

இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.அக்டோபர் 25,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

டில்லியில் உள்ளது இந்த நிறுவனம். இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருப்பவருக்கான ஒரு ஆண்டு படிப்பை இது நடத்துகிறது. இதில் +2 முடித்து 3 ஆண்டுகள் அரசு நிறுவனம் ஒன்றில் அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருப்பவரும் சேர முடியும்.

இது 2 படிப்புகளை நடத்துகிறது. டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் என்ற படிப்பையும் மல்டி மோடல் டிரான்ஸ்போர்ட் கன்டெயினரைசேசன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என்னும் படிப்பையும் இது நடத்துகிறது. பொதுவாக இவை பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகின்றன. ஏப்ரல்/மே வரை கூட இதில் சேரும் வாய்ப்பும் தரப்படுகிறது. கட்டணம் தோராயமாக ரூ.2200. முழு விபரங்களைப் பெற முகவரி:

Institute of Rail Transport Admission 2008
Room No. 17, Rail Bhavan,
Raisina Road,
New Delhi110001

தொலைபேசி:

23384171, 23303236,23303924, 23304147

Fax No :  911123384005,

இமெயில்:

irt@nde.vsnl.net.in

இன்டர்நெட் முகவரி : www.irtindia.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us