தான்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் யுனிவர்சிடி என்னும் பல்கலைக்கழகத்தில் சுரங்கத் துறையில் பி.எச்டி. செய்யலாம். எரிபொருள், சுரங்கம், மினரல், பெட்ரோலியம், மைனிங் மெசினரி என அரிய துறைகளில் பி.எச்டியை மேற்கொள்ளும் வாய்ப்பை இப் பல்கலைக்கழகம் தருகிறத. 2008ம் ஆண்டிற்கான படிப்புகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. உதவித் தொகையோடு கூடிய ஆய்வுப் படிப்புகள் இவை.
இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 2008ல் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. முழு விபரங்களைப் பெற http://www.ismdhanbad.ac.in என்னும் தளத்தைப் பார்வையிடுங்கள்.