உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோள்: சென்னை மாணவர்கள் சாதனை | Kalvimalar - News

உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோள்: சென்னை மாணவர்கள் சாதனைஜூன் 27,2018,12:48 IST

எழுத்தின் அளவு :

சென்னை: உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை, சென்னை, கேளம்பாக்கம் கல்லுாரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கோளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, நாசா ஆகஸ்டில், விண்ணில் ஏவ உள்ளது.

சர்வதேச அளவில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி களை மேற்கொண்டு வருகிறது. இதில், மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை வளர்த்திடும் வகையில், நாசாவும், &' - டூடுல் இன்க்&' அமைப்பும் ணைந்து, ஆண்டுதோறும், &'க்யூப் இன் ஸ்பேஸ்&' எனும் போட்டியை நடத்துகின்றன


இப்போட்டியில், பல்வேறு நாடுகளிலிருந்தும், 17 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பர். அந்த போட்டிக்கு, மாணவர்கள் தங்கள் தயாரிப்பு குறித்த, விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களின் தயாரிப்புகள், விண்ணில் ஏவப்படும்.கடந்த, 2017ம் ஆண்டு, கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த, ரிபாத் சாருக் ராஜ் என்ற மாணவர், 64 கிராம் எடையுள்ள, சிறிய கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து, உலக சாதனை படைத்தார்.


அது, விண்ணில் ஏவப்பட்டது.இச்சாதனையை சென்னை, கேளம்பாக்கம், இந்துஸ்தான் பல்கலையைச் சேர்ந்த, அரிகிருஷ்ணன், சுதி, அமர்நாத், கிரிபிரசாத் என்ற நான்கு மாணவர்கள், முறியடித்துள்ளனர். இவர்கள், 33 கிராம் எடையில், புதிய செயற்கைக் கோளை தயாரித்துள்ளனர்.இதை ஆகஸ்டில் விண்ணில் ஏவ, நாசா திட்டமிட்டுள்ளது. இவர்கள் தங்களின் தயாரிப்பை கின்னஸ், லிம்கா, ஆசிய, இந்திய அளவிலான சாதனை புத்தகங்களில், இடம் பெறுவதற்காகவும் விண்ணப்பித்துள்ளனர்.சாதனை மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லிய பின், அவர்களிடம் பேசினோம்.


செயற்கைக்கோள் தயாரிப்பிற்கான காரணம் என்ன?


தேசிய அளவில், அறிவியல் ஆராய்ச்சியில் மாணவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது. அதிலும், செயற்கைக்கோள் தயாரிப்பில், மாணவர்கள் அரிதிலும், அரிதாகவே ஈடுபடுகின்றனர்.


இதை மாற்றவே, எங்கள் சொந்த செலவில், செயற்கைக்கோள் தயாரித்து உள்ளோம். இது, உலகிலேயே மிகவும் எடை குறைந்தது.


செயற்கைக்கோள் பற்றி சொல்லுங்களேன்?


எங்கள் செயற்கைக்கோள், &'சர் - ஆர்பிட்டல்&' முறையில், சோதனை அடிப்படையில், தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, &'ஜெய்ஹிந்த் 1 எஸ்&' என, பெயரிட்டு உள்ளோம்.ரிபாத் சாருக் ராஜின் செயற்கைக்கோளில், செவ்வாய் கிரகத்தில், கார்பன் பைபர் எனும் பாலிமரில், வெளிப்புற பகுதி அமைக்கப்பட்டு இருக்கும். எங்களது, செயற்கைக் கோளில், நைலான் - 6 எனும் பாலிமரில், வெளிப்புற பகுதி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில், வானிலை நிகழ்வு


களை, துல்லியமாக கண்டறிய, 20 சென்சார்கள் பொருத்தப்பட்டுஉள்ளன. அவற்றை, பதிவு செய்ய, &'மெமரி கார்டு&' பொருத்தப்பட்டுஉள்ளது. இதன், மொத்த எடை, 33 கிராம். இது, செயல்பட, &'ஆன்போர்டு கணினி&' பொருத்தப்பட்டுஉள்ளது. இக்கணினி, &'ஆர்டினோ&' எனும், மென்பொருளில் செயல்படுகிறது. இந்த செயற்கைக்கோள் தயாரிப்புக்கு, பேராசிரியர் தினேஷ் குமார் வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருந்தது.


செயற்கைக்கோளின் பயன்கள் என்ன?


உலகளவில், மாறிவரும் பருவ நிலை மாற்றங்களை கண்டறிவது, மிகவும் சவாலாக உள்ளது.


இச்செயற்கைக்கோள் மூலம், அதை எளிதில் கண்டறியலாம். அதேபோல், &'க்யூப் இன் ஸ்பேஸ்&' போட்டியில் தேர்வு செய்யப்படும் கண்டுபிடிப்புகள், பலுானில் அனுப்பப்படுகிறது.


அவ்வாறு, பலுானில் செல்லும் போது, வானில் உள்ள காற்றின் அடர்த்தி, மேகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் அளவுகள் உட்பட, ௨௦ விதமான பாராமீட்டர்களை எளிதில் கண்டறியலாம். அதனால், அதிக மழை பொழிவு உள்ள இடங்களையும் கண்டறியலாம்.


நாசா ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு, நைலான், கார்பன் பைபர், கார்பன் நானோ டியூப்ஸ் உள்ளிட்ட, பல்வேறு வகையான பாலிமர்களை கொண்டு, ஆராய்ச்சி நடக்கிறது.இதில், நாங்கள் நைலான் பாலிமர்களை, செவ்வாய் கிரகத்தில் பயன்படுத்த முடியுமா என்பதை கண்டறிய, அந்த பாலிமரிலேயே செயற்கைக்கோளின் வெளிப்புறத்தை தயாரித்து உள்ளோம்.


செயலிழந்தால் கண்டுபிடிக்க முடியுமா?


நாசாவில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலுானில், டைடானியத்தால் செய்யப்பட்ட &'கன்டெய்னர்&'னுள், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, மற்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளுடன், எங்களின் செயற்கைக்கோளும் ஏவப்படும்.குறிப்பிட்ட துாரம் சென்றதும், வானில் ஏற்படும் குறைந்த காற்றழுத்தத்தால், பலுான் வெடிக்கும். பின், மென்பொருளின் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.செயற்கைக்கோள் செயல்படும் நேரம் முடிந்தபின், எங்கு விழுந்தாலும், ஜி.பி.எஸ்., உதவியுடன் நாம் கண்டறியலாம். அதை மீட்டு, மீண்டும் ஆய்வும் செய்யலாம்.


அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?


எதிர்காலத்தில், நாங்கள் குறைந்தஅளவு, திட எரிபொருளில் செயல்படும் ஏவுகணையை தயாரிக்க உள்ளோம். இதற்கு, காப்பீட்டு உரிமம், எரிபொருளுக்கான உரிமம், அதற்கான பொருளாதாரத் தேவைகள் பெறுவது உள்ளிட்டவை சவாலாக உள்ளன.


மேலும், எங்கள் செயற்கைக்கோள், விண்ணில் ஏவப்படுவதை பார்க்க, அமெரிக்கா செல்லவும், பொருளாதார பிரச்னை உள்ளது. அரசு உதவி செய்தால், நாங்கள் சவால்களை கடந்து, சாதிக்க தயாராக உள்ளோம்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us