சட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன? | Kalvimalar - News

சட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன?அக்டோபர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய சட்டப் படிப்பானது 6 மாத டிப்ளமோவில் தொடங்கி ஒரு ஆண்டு டிப்ளமோ, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த படிப்பாக நமது பல்கலைக்கழகங்களால் தரப்படுகிறது. வெறும் வக்கீலாக மட்டுமல்லாமல் பிசினஸ், கல்வி, அரசியல் என சட்டப் படிப்பு முடித்தவர் நுழையக்கூடிய துறைகள் இன்று பல உள்ளன.

நமது சட்டப் படிப்புகள் பின்வரும் சிறப்புப் பிரிவுகளில் தரப்படுகின்றன.

*சிவில் சட்டம்

*கிரிமினல் சட்டம்

*கம்பெனி அல்லது கார்ப்பரேட் சட்டம்

*டாக்சேஸன் லா (வருமான வரிச் சட்டம்/சுங்க வரிச் சட்டம்)

*பன்னாட்டுச் சட்டம்

*குடும்பச் சட்டம்

*அரசியலமைப்புச் சட்டம்

*நிர்வாகச் சட்டம்

*டிரேட் மார்க்/காப்பிரைட்/இன்டலக்சுவல் பிராபர்டி சட்டம்/பேட்டன்ட் சட்டம்

பொதுவாக சட்டப்படிப்புகளில் சிறப்புப் பிரிவுகளைப் படிப்பவருக்கு வெறும் சட்டம் மட்டுமல்லாது அந்தத் துறையைப் பற்றிய பரந்த அறிவும் தேவைப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us