மதுரை காமராஜர் பல்கலையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி | Kalvimalar - News

மதுரை காமராஜர் பல்கலையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சிஜூன் 23,2018,10:27 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மதுரை காமராஜர் பல்கலையில், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் என்ற, ஓராண்டு சுய வேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சிக்கான, விண்ணப்பம் வினியோகம் துவங்கியுள்ளது.

இது குறித்து, மதுரை காமராஜர் பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:மதுரை காமராஜர் பல்கலையின், வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவு பணித்துறையானது, &'ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங்&' என்ற, ஓராண்டு சுயவேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கான, விண்ணப்பம் வினியோகம், ஜூன், 20ல் துவங்கியது.சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள, பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பயிற்சி வகுப்பு, அடுத்த மாதம் துவங்குகிறது; காலை, 10:00 முதல், பிற்பகல், 1:00 மணி வரை, வகுப்பு நடைபெறும்.பயிற்சி முழுவதும், செய்முறை பயிற்சியாகவே இருக்கும்; பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, பல்கலை சான்றிதழ் வழங்கப்படும்.


விண்ணப்பங்களை, &'இயக்குனர், வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவு பணித்துறை, மதுரை காமராஜர் பல்கலை, பாண்டியன் ஹோட்டல் எதிர்புறம், அழகர் கோவில் சாலை, மதுரை - 625 002&' என்ற, முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 0452 - 2537 838 என்ற, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us