முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் 500 பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு | Kalvimalar - News

முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் 500 பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்புஜூன் 14,2018,14:20 IST

எழுத்தின் அளவு :

அண்ணாநகர்:முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, &'முதியோரை மதிப்போம்&' என, 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஐ.நா., சபை, 2006ம் ஆண்டிலிருந்து, ஜூன், 15ம் தேதியை, முதியோர் வன்கொடுமை ஒழிப்பு நாளாக, அனுசரித்து வருகிறது.

இதையடுத்து, வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை சார்பில் நேற்று, அண்ணா நகர், எஸ்.பி.ஓ,ஏ., பள்ளியில், மாணவ - மாணவியருக்கு, &'முதியோரை மதிப்போம்&' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அறக்கட்டளையின் நிறுவனர், டாக்டர்.வி.எஸ். நடராஜன் பேசியதாவது:

முதியோர், மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மொபைல்போனில் நேரத்தை செலவிடும் இளைஞர்களோ, முதியோரை தனிமையில் தவிக்க விடுகின்றனர்.

உண்மையான அன்பும், பாசமும் தான், முதியோரின் எதிர்பார்ப்பு. அதைக் கொடுப்பது, இளைஞர்களின் கடமை. முதியோரை மதித்தல் குறித்த கருத்துகள், பள்ளி பாட நுாலில் இடம்பெற வேண்டும். பள்ளியில், மாதம் ஒருமுறை, &'முதியோரை மதிப்போம்&' என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்க, தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

சமூக நலத்துறை ஆணையர், வி.அமுதவல்லி பேசுகையில், &'தேசிய முதியோர் தினம் எப்போது, முதியோரின் தேவை என்ன&' போன்ற பல கேள்விகள் கேட்டு, சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.தொடர்ந்து, முதியோர் குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. மேலும், &'முதியோரை மதிப்போம்&' புத்தக வெளியீடு நடந்தது. இதையடுத்து, மாணவ - மாணவியர் உறுதிமொழி எடுத்தனர்.

பள்ளி முதல்வர், ராதிகா உன்னி, சமூக நலத்துறை துணை இயக்குனர் ரேவதி, &'புதிய உறவு&' மாத இதழ் ஆசிரியர், எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட, 500க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

உங்க தாத்தா பாட்டிகளை உங்க பெற்றோர் நன்கு அன்புடன் அரவணைத்துப் பேணி பாதுகாக்கிறார்களா ? நீங்கள் அவர்களை மதித்து நடக்கிறீர்களா ?
by s t rajan,India    15-ஜூன்-2018 05:32:13 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us