பிளஸ் 2, 10ம் வகுப்பு 2019ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு | Kalvimalar - News

பிளஸ் 2, 10ம் வகுப்பு 2019ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்புஜூன் 12,2018,17:13 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கல்வியாண்டின் துவக்கத்திலேயே, பிளஸ் 2 , பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.4.19 அன்று வெளியிடப்படும். 

பிளஸ் 1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 8.5.19 அன்று வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.19 முதல் 29.3.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும். 

மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில, தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார். 

12ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு போதுத்தேர்வு அட்டவணை - 

புதிய தேர்வு முறை - 2.30 மணி நேரம்


01/03/2019
மொழி பாடம்

05/03/82019
ஆங்கிலம்

07/03/2019
கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீஷியன் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், புட் மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர், அக்ரிகல்ச்சுரல் பிராக்டிஸ், நர்ஸிங், நர்ஸிங் வொகேஷ்னல்

11/03/2019
இயற்பியல், பொருளாதாரம், ஜென்ரல் மிஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ், எக்யூப்மெண்ட்ஸ், டிராட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் அண்ட் அப்லையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலாஜி

13/03/2019
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

15/03/2019
கம்யூனிகேடிவ் இங்கிலிஷ், இந்தியன் கல்ச்சர், கம்பியூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் லேங்குவேஜ், ஹோம் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், ஸ்டாடிக்ஸ்

19/03/2019
உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸ்னஸ் மேக்ஸ், ஆப்பிஸ் மேனேஜ்மெண்ட், அகௌண்டன்ஸி அண்ட் ஆடிட்டிங்

இதே நாட்களில் பழைய தேர்வு முறை அரியர் தேர்வுகளும் நடத்தப்படும் (3 மணி நேரம்)

11ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு போதுத்தேர்வு அட்டவணை

புதிய தேர்வு முறை - 2.30 மணி நேரம்


06/03/2019
மொழி பாடம்

08/03/2019
ஆங்கிலம்

12/03/2019
கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீஷியன் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் டிரஸ் டிசைனிங், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ், நர்ஸிங் (ஜென்ரல்), நர்ஸிங் வொகேஷ்னல்

14/03/2019
இயற்பியல், பொருளாதாரம், கம்பியூட்டர் டெக்னாலஜி

18/03/2019
உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸ்னஸ் மேத்தமெட்டிக்ஸ் அண்ட் ஸ்டாடிஸ்டிக்ஸ், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆப்பிஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் செக்ரட்ரிஷிப்

20/03/2019
வேதியியல், அகௌண்டன்ஸி, புவியியல்

22/03/2019
கம்யூனிகேடிவ் இங்கிலிஷ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், கம்பியூட்டர் சயின்ஸ், கம்பியூட்டர் அப்லிகேஷன்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் லேங்குவேஜ், ஹோம் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ்

இதே நாட்களில் பழைய தேர்வு முறை அரியர் தேர்வுகளும் நடத்தப்படும் (3 மணி நேரம்)


10ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு போதுத்தேர்வு அட்டவணை

(2.30 மணி நேரம்)


14/03/2019
- மொழி பாடம் 1ம் தாள்

18/03/2019 - மொழி பாடம் 2ம் தாள்

20/03/2019 - ஆங்கிலம் 1ம் தாள்

22/03/2019 - ஆங்கிலம் 2ம் தாள்

23/03/2019 - ஆப்ஷ்னல் லேங்குவேஜ்

25/03/2019 - கணிதம்

27/03/2019 - அறிவியல்

29/03/2019 - சமூக அறிவியல்

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us