ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா? தயவு செய்து விளக்கவும். | Kalvimalar - News

ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா? தயவு செய்து விளக்கவும். அக்டோபர் 18,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

21ம் நூற்றாண்டில் எழுச்சி பெறும் துறைகளுள் ஒன்றாக இருப்பது ஈவன்ட் மேனேஜ்மென்ட். முன்பு போல அல்லாமல் இன்று எந்த விழாவை எடுத்தாலும் அதை மிக பிரம்மாண்டமாகவும் மனதை கவருவதாகவும் நடத்த வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் விதத்தைப் பார்த்தால் மிரட்சியாகவே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இன்று எல்லாமே பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எல்லா விழாக்களுமே ரெகார்ட் செய்யப்பட்டு ஓரிரு நாட்களிலேயே அவை ஒளிபரப்பப்படுகின்றன. எனவே நேரில் பார்ப்பவரைத் தவிர டிவியில் பார்ப்பவர் எண்ணிக்கை தான் பல லட்சக்கணக்கில் இருக்கிறது. டிவியிலும் நேரிலும் நாம் பார்க்கும் விருது வழங்கும் விழா, முக்கிய மேளாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து நடத்தும் மேலாண்மையைத் தான் ஈவண்ட் மேனேஜ்மென்ட் எனக் கூறுகிறார்கள்.

முறையான எந்த ஈவண்ட் மேனேஜ்மென்ட் படிப்பும் படிக்காமல் எத்தனை பேர் அனாயசமாக இது போன்ற மெகா திருவிழாக்களை நடத்துவதை நாம் பார்த்து வந்துள்ளோம்? எனினும் இன்றைய காலத்தின் கட்டாயம் இந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட். ஒரு நிகழ்ச்சியின் ஒவ்வொரு சிறு அசைவும் தெளிவாக திட்டமிடப்பட்டு பிரமாதமாக செயல்படுத்தப்படுவதற்கு ஈவன்ட் மேனேஜ்மென்ட் தான் மிகவும் உதவுகிறது. திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், நிறுவனங்களின் மாநாடுகள், செமினார்கள், கருத்தரங்குகள், புதிய பொருட்களை அறிமுகம் செய்யும் விழாக்கள் என அனைத்து ஷோக்களுக்கும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இன்று அத்தியாவசியமாகியுள்ளது. பிரபலமானவர்களோடும் புகழ் பெற்ற பிரமுகர்களோடும் ஈவன்ட் மேனேஜர்கள் தோளோடு தோள் சேர்த்து பழகுகிறார்கள்.

விழா நடத்த விழைபவர்கள் ஈவன்ட் மேனேஜிங் நிறுவனங்களை அணுகியவுடன் அந்த நிறுவனம் துவக்கத்தில் புராஜக்ட் ரிபோர்ட் ஒன்றை தயார் செய்து தருகிறது. எவ்வளவு செலவாகும்? என்னென்ன அம்சங்கள் தேவை? எத்தனை நாளில் அதை தயார் செய்யலாம் போன்ற அனைத்து விபரங்களும் ஒரு புளூபிரின்ட் போல அந்த அறிக்கையில் தரப்படுகின்றன. விழா நடத்த விரும்புபவர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் திட்டம் செயலாக்கத் துவங்குகிறது.

ஈவண்ட் மேனேஜிங் துறையில் நுழைய அடிப்படையில் உங்களுக்கு சில திறன்களும் குணாதிசயங்களும் தேவை.

* தலைமை தாங்கும் பண்பு

* யாரையும் நயம்பட பேசி மசிய வைக்கும் திறன

* எளிதாகப் பழகும் திறன

* ஒன்றிணைக்கும் திறன

* மார்க்கெட்டிங் மற்றும் வாணிப உத்திகளைப் பெற்றிருப்பத

* லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடு செய்யும் திறன்கள

* எதிர்பாராமல் ஏற்படும் திருப்பங்களை லாவகமாக கையாளும் திறன

* பகுத்தாராயும் திறன், நுண் திறன் மற்றும் பிரச்னைகளை கையாளும் திறன்

இத் துறையில் சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகள் தரப்படுகின்றன. பொதுவாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்புகள் மும்பை, டில்லி, கோல்கட்டா போன்ற மாநகரங்களில் தான் நேரடிப் படிப்புகளாக நடத்தப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us