ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, ரிசல்ட் | Kalvimalar - News

ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, ரிசல்ட்மே 17,2018,13:44 IST

எழுத்தின் அளவு :

பொது தேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

பரபரப்பான பொது தேர்வு முடிவுகள், மிகவும் அமைதியாக வெளியிடப்பட்டதால், ஆசிரியர் களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

பாராட்டு மழை

தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பிற்கு, தமிழக அளவிலான நுழைவு தேர்வு ரத்தான பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கும், அதன், &'கட் ஆப்&' மதிப் பெண்ணுக்கும், அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.

மாநில அளவில், எந்த பள்ளி, &'டாப்&' மதிப்பெண் பெறுகிறது; பள்ளி அளவில், முதல் மதிப்பெண் பெறும் மாணவ - மாணவியர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்வு முடிவை வெளியிடும் போது, மாநில அளவில், &'டாப்பர்&' ஆக வரும் மாணவர்கள், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

அவர்கள், &'டாப்பர்&' ஆக வர, என்ன முயற்சி எடுத்தனர் என, ஊடகங்களில் பேட்டி எடுக்கப்படும். பெரும்பாலானவர்கள், &'டாக்டர் ஆக வேண்டும்; கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம்&' என, தெரிவிப்பர்.இப்படி கூறிய பல மாணவர்கள், உயர்கல்வியை முடித்ததும், முதல் ஆளாக, வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும்

பணியில் சேர்வதோடு, கிராமங்களை கண்டுகொள்வதில்லை. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களை, மற்ற மாணவர்கள், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவர். அவர்களின், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், கேக் ஊட்டி, போட்டோவுக்கு, &'போஸ் கொடுப்பர். 

இரண்டு ஆண்டுகளாக, &'டாப்பர்&' என்ற, &'ரேங்கிங்&' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆரோக்கிய மற்ற கொண்டாட்டங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதே போல, தேர்வு முடிவை, தனியார் இணைய தளங் களில்வெளியிடும் நிலையும் படிப்படியாக மாற்றப் பட்டு, தேர்வுத் துறையே தங்கள் இணைய தளத்தில், நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிட துவங்கியது.

புதுமைகள்


இந்த முறை, மாணவர்களுக்கு எளிதாக இருந்தா லும், கிராமப்புற மாணவர்கள் அல்லது கோடை விடுமுறையில், வெளியூர்களில் உள்ள மாணவர் கள், இணையதள இணைப்பு உள்ள பகுதியை தேடி வந்து, தேர்வு முடிவை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர் களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவை வெளியிடும் முறை, 2017 முதல் அறிமுகம் ஆகியுள்ளது.

இதனால், மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே, தேர்வு முடிவை, மதிப்பெண்ணுடன் அறியும் வசதி கிடைத்துள்ளது. மொத்தத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு கல்வி துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வெறிச்சோடிய தேர்வுத்துறை வளாகம்


மாநில, மாவட்ட அளவில், மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேடிப்பிடித்து, அவர்களிடம் ஊடகத்தினர் பேட்டி எடுப்பர். இதற்கு, இரண்டு ஆண்டுகளாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்வுமுடிவுகள், தேர்வுத் துறை அலுவலகத்தில் ஊடகத்தினருக்கு வழங்கப்படும். இந்த தகவல்களை பெற, செய்தியாளர்கள், கேமரா, மைக் சகிதமாக, காலை முதல் தேர்வுத்துறை வாயிலில் காத்திருப்பர்.

தேர்வு முடிவு வெளியிடும் நேரத்தில், பட்டியலை பெற்று, முதலில் யார், &'பிரேக்கிங் நியூஸ்&' வழங்குவது என, போட்டி ஏற்படும். அதனால், பட்டியல் வினியோகத்தின் போது, தள்ளு முள்ளு ஏற்படும். இதற்கும், இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது தேர்வு முடிவின் போது, கேமராக்கள் குவிந்திருக்கும், தேர்வுத்துறை அலுவலக வளாகம் நேற்று, ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்


பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப் பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். மேலும்,www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

விருதுநகர், &'டாப்&' - விழுப்புரம் கடைசி

பிளஸ் 2 தேர்ச்சி பட்டியலில், மாவட்ட அளவில், விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. சென்னை மாவட்டம், 14ம் இடம் பெற்றுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us