விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க | Kalvimalar - News

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கமே 16,2018,14:29 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் விடத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்த தகவல்களை அரசுத் தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2018ம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16/05/2018 அன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.  


மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 

தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 21/05/2018ம் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அதே நாளில் www.dge.tn.nic.in என்கிற இணையதளத்தில் தங்களது பிறந்த நாள் மற்றும் பதிவெண் ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விடைத்தால் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17/05/2018ம் தேதி முதல் 19/05/2018 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.க் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலும் தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். 

விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் பின்வருமாறு; பகுதி-1 மொழி பாடத்திற்கு ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்) பாடத்திற்கு ரூ.550 மற்றும் ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் பகுதி-1 மொழி, பகுதி-2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் ரூ.305 (இரு தாள்கள் சேர்த்து), ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.  

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வெழுதப் பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us