பி.எஸ்சி. படித்து முடித்துள்ள நான் வங்கி, ரயில்வே போன்ற தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நானாகவே படித்தால் போதுமா? | Kalvimalar - News

பி.எஸ்சி. படித்து முடித்துள்ள நான் வங்கி, ரயில்வே போன்ற தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நானாகவே படித்தால் போதுமா?அக்டோபர் 18,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த சில மாதங்களாக பொதுத் துறை வங்கிகளில் எண்ணற்ற கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படுவதை கவனித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இதே போக்கு மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் உத்வேகமும் திறனும் நமக்கு கட்டாயம் தேவையல்லவா? எனவே உங்களது முடிவு சரியானது தான். எனினும் உங்களது கடிதப் பின்னணியைப் பார்க்கும் போது நீங்களாகவே இது போன்ற தேர்வுகளுக்குத் தயாராவது எதிர்பார்க்கும் முடிவை எதிர்பார்க்கும் காலத்துக்குள் தருமா என்பது சந்தேகம் தான்.


ஏனெனில் படிக்கும் வரை போட்டித்தேர்வுகள் பற்றிய சிறிய விழிப்புணர்வு கூட இல்லாமல் திடீரென நுண்ணறிவு, கணிதம், ஆங்கிலம், பொது அறிவு என வேறொரு தளத்திற்குச் சென்று இறங்கி தயாராவது சிரமம் தான். எனவே உங்களுக்கு அருகிலுள்ள பெரிய நகரமான மதுரையில் 2 மாதங்கள் வரை விடுதியிலாவது தங்கி ஏற்கனவே அங்கு இயங்கும் சிறப்புப் பயிற்சி நிறுவனம்
இருப்பது பற்றி அறிந்து சேர்ந்தால் அடுத்த 6 மாதங்களில் நீங்களும் ஒரு வங்கி ஊழியர் அல்லது அரசு ஊழியர் என்பதை நினைத்துப் பார்த்து முடிவு எடுக்கவும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us