வெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News

வெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.அக்டோபர் 13,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐ.டி. துறையுடன் இணைந்ததும் தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான வெப்டிசைனிங் துறை மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது.

கல்வி, பொதுத் துறை, தொழிற்சாலைகள், வாணிபம் என இன்று அனைத்துத் துறைகளும் இணையதள சேவைகளை பயன்படுத்துவதை காண்கிறோம். தேவைகளை அறிதல், தீர்வை வடிவமைத்தல், வெப் கன்டென்ட் எழுதுதல், வெப் கன்டென்ட் திட்டமிடுதல், புராடக்ட் போட்டோகிராபி, கிராபிக் டிசைனிங், டிசைனிங் பிளாஷ், எச்.டி.எம்.எல். கோடிங், ஜாவா ஸ்கிரிப்டிங் என்று பல்வேறு சேவைகள் உள்ளன.நல்ல கிரியா ஊக்க சக்தி கொண்டவர்களுக்கு இந்தத் துறை பொருத்தமான ஒரு துறையாகும்.

இந்தியாவிலுள்ள பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் வெப் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்புகளைத் தருகின்றன. வெப் டிசைனிங்கில் இருப்பவர் கிராபிக்ஸ்களை வடிவமைப்பது மற்றும் லே-அவுட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு வெப் டிசைனர் முழுமையாக கலைத் தன்மை கொண்டவராக இருப்பதோடு அதைக் காட்டும் விதமான திறன்களைக் கொண்டிருக்கவும் வேண்டும். வண்ணங்களைப் பற்றிய முழுமையான அறிவு பெற்றிருப்பதுடன் விசுவல் ஆர்ட் மற்றும் விசுவல் டிசைனிங்கில் குறிப்பிடத்தக்க திறன் பெற்றிருப்பதும் முக்கியம். புதிய வடிவமைப்பு சூழலை உருவாக்கும் திறமையும் வேண்டும். வெப் டிசைனிங் துறையில் சிறந்து விளங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் படித்திருப்பது கூடுதல் தகுதியாக தேவைப்படுகிறது. இந்தியாவின் புகழ் பெற்ற ஐ.டி. பயிற்சி நிறுவனங்களான அரினா, ஆப்டெக், எடிட் போன்றவை வெப் டிசைனிங் படிப்புகளைத் தருகின்றன.

இந்தியாவில் ஐ.டி. துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுவருவதன் காரணமாக வெப் டிசைனிங்கிற்கு நல்ல எதிர்காலம் உருவாகியுள்ளது. தங்களுக்கென்று பிரத்யேகமாக இணைய தளத்தை அமைக்க விரும்பும் பல்வேறு நிறுவனங்கள் திறமை மற்றும் தகுதி வாய்ந்த வெப் டிசைனர்களை பணியிலமர்த்துகின்றன. இது தவிர விளம்பர நிறுவனங்கள், புத்தக வெளியீட்டாளர்கள், ஆடியோ விசுவல் மீடியா, டிசைன் ஸ்டுடியோக்கள், பிரிண்டர்கள், டைப் செட்டர்கள், உற்பத்தியாளர்கள், பல்பொருள் அங்காடிகள், மார்க்கெட்டிங் நிறுவனங்கள், விளம்பரப் பலகைகள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் போன்றவற்றிலும் வெப் டிசைனிங் படித்தவர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

வெப் டிசைனிங்கில் வேலை தரும் பெரிய நிறுவனங்கள் என இன்போசிஸ், விப்ரோ, ஸ்மார்டெக், சென்சார், காக்னைசன்ட், ஹர்பிங்கர், அப்சைட் லேர்னிங் என்ற முக்கிய நிறுவனங்களில் வெப் டிசைனர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us