யுனெஸ்கோ விருது | Kalvimalar - News

யுனெஸ்கோ விருதுஆகஸ்ட் 07,2022,00:00 IST

எழுத்தின் அளவு :

ஸ்டெம் துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்காகவும், இளம் விஞ்ஞானிகளை ஊக்கிவிப்பதற்காகவும் யுனெஸ்கோ - அல் போசன் சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
அறிமுகம்


சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்ட அல் போசன் அறக்கட்டளையின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் துறைகளில் இளம் விஞ்ஞானிகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் உலக அளவில் சமூக - பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.நோக்கங்கள்:


* ஸ்டெம் பிரிவுகளில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பது


* யுனெஸ்கோவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் - எஸ்.டி.ஜி.,களை சாதகமாக்கும் வகையில் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது


* சர்வதேச அளவில் சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும் இளைஞர்களை அங்கீகரிப்பது


* குறிப்பாக இளம் மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் விஞ்ஞானம், அறிவியல் ஆராய்ச்சி, பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அறிவியல் துறைகளில் அவர்களது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள ஊக்குவிப்பது.விருது விபரம்:


* கல்வி, ஆராய்ச்சி அல்லது சமூக வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பில் ஸ்டெம் முன்னேற்றத்தை ஊக்குவித்த ஐந்து நபர்களுக்கு மட்டுமே பரிசும், விருதும் வழங்கப்படுகிறது.


* தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்படுகிறது. இதன்படி, இவ்விருதிற்கான மொத்த மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். 


* விருது தொகை தவிர, தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.


* ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து பேருக்கு யுனெஸ்கோ இந்த விருது வழங்குகிறது.


* 40 வயதிற்கு குறைவாக இருப்பவர்களுக்கும், விண்ணப்பிக்கும் நேரத்தில் ஸ்டெம் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.விபரங்களுக்கு: https://unescoalfozanprize.org/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us