வெளிநாடுகளுடன் இணைந்து படிப்புகள்! | Kalvimalar - News

வெளிநாடுகளுடன் இணைந்து படிப்புகள்!ஏப்ரல் 29,2022,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள், படிப்புகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.கல்வி நிறுவனங்களுக்கான தகுதிகள்


நாக் எனும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் குறைந்தபட்சம் 3.01 மதிப்பெண் பெற்ற எந்த ஒரு இந்திய கல்வி நிறுவனமும் அல்லது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு - என்.ஐ.ஆர்.எப்.,ன் பல்கலைக்கழக பிரிவில் முதல் 100 இடங்களுக்குள் பெற்ற எந்த ஒரு இந்திய கல்வி நிறுவனமும், உரிய விதிமுறைகளை பின்பற்றி வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து இரட்டை பட்டப்படிப்புகளை வழங்கலாம்.டைம்ஸ் உயர் கல்வி அல்லது க்யூ.எஸ்., உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் பெற்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, யு.ஜி.சி.,யின் எந்த முன் அனுமதியும் பெறாமல், கூட்டு - ஜாயிண்ட் அல்லது இரட்டை - டூயல் படிப்புகளை இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கலாம். கட்டுப்பாடுகள்


வெளிநாட்டு கல்வி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து முழுநேர படிப்புகளை வழங்க அனுமதி அளிக்கப்படும் நிலையில், ஆன்லைன் மற்றும் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கற்றல் முறையில் வழங்கப்படும் பாடத்திட்டங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது. மேலும், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனத்திற்கும் இந்திய உயர்கல்வி நிறுவனத்திற்கும் இடையே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, பிரான்சைஸ் அல்லது ஸ்டடி சென்டர் முறையில் செயல்படக்கூடாது. டுவின்னிங் புரொகிராம்:


அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முறையிலேயே இரட்டையர் திட்டம் - டுவின்னிங் புரொகிராம் வழங்கப்பட வேண்டும். இதன்படி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளை குறிப்பிட்ட காலங்களுக்கு இந்திய கல்வி நிறுவனங்களால் இந்தியாவிலேயே வழங்க வேண்டும். மற்றொரு பகுதியாக, வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் படிப்பு தொடரப்படலாம். அதேநேரம், அப்படிப்புகளுக்கான சான்றிதழ்கள் இந்திய கல்வி நிறுவனங்களால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.டூயல் டிகிரி: 


டூயல் - கூட்டு பட்டப்படிப்புகளை பொறுத்தவரை, பாடத்திட்டங்களை இந்திய மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து கூட்டாக வடிவமைக்கலாம். ஆனால், ஒரே துறையிலான படிப்புகள் மற்றும் சமமான நிலையில் பாடங்கள் வழங்கப்பட வேண்டும். அத்தகைய படிப்புகளுக்கு இரண்டு கல்வி நிறுவனங்களும் இணைந்து ஒரே சான்றிதழ் வழங்கலாம். இது எந்த வகையிலும் தனித்தனி பிரிவுகளில் இரு வேறு பட்டப்படிப்பு திட்டங்களாகக் கருதப்படக்கூடாது.முன் அனுமதி


இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், விவசாயம் மற்றும் பிற தொழில்முறை சார்ந்த படிப்புகளை வழங்குவதற்காக வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வ கவுன்சில்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து தேவையான அனுமதிகளை பெற வேண்டும். இந்த விதிமுறைகளின் கீழ் வழங்கப்படும் பட்டம், இந்திய உயர்கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் எந்தவொரு பட்டத்திற்கும் சமமானதாக இருக்கும். எந்தவொரு அதிகாரியிடமிருந்தும் சமமானதைக் கோர வேண்டிய அவசியமில்லை! - எம்.ஜெகதேஷ் குமார், தலைவர், யு.ஜி.சி., 


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us