எங்கு படிக்கலாம் நேனோடெக்னாலஜி? | Kalvimalar - News

எங்கு படிக்கலாம் நேனோடெக்னாலஜி?அக்டோபர் 04,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மருத்துவம், ஏரோஸ்பேஸ், இன்ஜினியரிங், மருத்துவம், தொழிற் துறைகளில் நேனோடெக்னாலஜி அடுத்த சில ஆண்டுகளில் புரட்சியை உருவாக்கப் போகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

 

சூரிய ஒளியிலிருந்து அளவற்ற மின்சாரம் தயாரிப்பதிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட செல்லை சரி செய்திட, பெரிய நீர் நிலைகளை சில நொடிகளில் சுத்தம் செய்திட என்று இதன் பயன்பாட்டைப் பற்றிக் கேட்டால் நம்ப முடியாததாக இருக்கிறது.

 

இப்படித்தான் கம்ப்யூட்டரைப் பற்றியும் இதன் பயன்பாட்டைப் பற்றியும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுபோலவே விஞ்ஞானத்தின் அடுத்த புரட்சி நேனோடெக்னாலஜி தான் என கருதப்படுகிறது.

 

குற்றவாளிகளின் டி.என்.ஏவைக் கொண்டு அவர்களை எளிதாக அடையாளம் காணுவது, கெமிக்கல் ஆயுதங்களிடமிருந்து பாதுகாக்கும் ஆடைகளைத் தயாரிப்பது, இது இயற்பியல், வேதியியல், பயோஇன்பர்மேடிக்ஸ், பயோடெக்னாலஜி போன்றவற்றின் மிகச் சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறையாக தற்போது அறியப்படுகிறது.

 

16 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இதைப் பற்றிய ஆய்வுகள் தொடங்கினாலும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் இத் துறை வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.

 

நேனோடெக்னாலஜி தகுதிக்கான வேலைத் துறைகள் எவை தெரியுமா? பார்மாசூடிக்கல், மருத்துவம், விவசாயம், உணவு மற்றும் பானங்கள், சுற்றுச்சூழல் நிறுவனங்கள், அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் ஆய்வு மையங்கள்.கல்வி நிறுவனங்கள், பயோடெக்னாலஜி, ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் மையங்கள் மற்றும் புதிய பொருட்களை வடிவமைப்பது, தொழில் நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளை கிரியேட்டிவாக பயன்படுத்தக்கூடிய மீடியா மற்றும் கம்யூனிகேஷன் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நானோடெக்னாலஜியைப் படித்துத் திறன் பெறுபவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

 

தற்போது இத்துறையில் பட்ட மேற்படிப்புகள் குறிப்பாக எம்.டெக். படிப்பு மட்டுமே தரப்படுகிறது.

 

என்றாலும் விரைவில் பட்டப்படிப்புகளும் சிறப்பு டிப்ளமோ படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றே நம்பலாம்.

 

இதில் சிறப்புப் படிப்புகளைத் தரும் நிறுவனங்கள்:

இது தவிர டில்லி பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வுப் படிப்புகள் உள்ளன. தனியார் துறையில் நொய்டாவில் இயங்கும் அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் நேனோடெக்னாலஜி 2 ஆண்டு எம்.டெக். படிப்பைத் தருகிறது.

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us