ஆசிரியர்களுக்கு யு.கே., உதவித்தொகை | Kalvimalar - News

ஆசிரியர்களுக்கு யு.கே., உதவித்தொகைமார்ச் 30,2022,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு யு.கே.,ல் உள்ள இரண்டு சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகை திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்குகிறது.முக்கியத்துவம்: இந்தியாவில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆங்கில மொழி ஆசிரியர்கள், வகுப்பறைகளில் ஆங்கில மொழி கற்றலை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்று புரிந்துகொள்ள இந்த உதவித்தொகை திட்டம் உதவும். கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகள்:* லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முழுநேர எம்.ஏ., படிப்பு


கால அளவு: செப்டம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை.* ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் / பகுதிநேர எம்.எஸ்சி., படிப்பு. யு.கே..,வில் ஓர் ஆண்டு முழுவதும் தங்கி படிக்க இயலாத ஆசிரியர்களுக்காக இத்திட்டம் வழங்கப்படுகிறது. 


கால அளவு: 30 மாதங்கள். இதில், ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் இரண்டுவார காலம் தங்கி பயில வேண்டும்.உதவித்தொகை எண்ணிக்கை: இரண்டு பல்கலைக்கழகத்திலும் தலா 3 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 6 இந்திய ஆசிரியர்களுக்கு இந்த உதவித்தொகை திட்டம் வழங்கப்படுகிறது.


 


உதவித்தொகை விபரம்:


* ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வு கட்டணம்


* யு.கே., பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான கல்விக் கட்டணம்


* யு.கே.,வில் தங்குவதற்கான செலவீனங்கள்


* யு.கே., சென்றுவருவதற்கான விமானக் கட்டணம் 


* விசா கட்டணம் மற்றும் காப்பீட்டு கட்டணம் ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தில் வழங்கப்படும்.தகுதிகள்: இந்திய நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். இந்திய அரசு கல்வித்துறையில் நேரடியாக பணியாற்றும் ஆங்கில மொழி ஆசிரியராக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் ஆங்கில மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன்பு யு.கே.,வில் பட்டம் பெற்றவர்களாகவோ, சமீபத்தில் யு.கே.,வில் வாழ்ந்தவர்களாகவோ இருக்க கூடாது. பிரிட்டிஷ் அரசின் இரட்டை குடியுரிமை பெற்றவராக இருக்க கூடாது. இதுவரை யு.கே., அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் எந்த ஒரு உதவித்தொகையையும் பெற்றவராக இருத்தல் கூடாது.விபரங்களுக்கு: www.britishcouncil.in/programmes/english/scholarships-english-teachers-indiaAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us