மாணவிகளுக்கு இலவச உயர்கல்வி | Kalvimalar - News

மாணவிகளுக்கு இலவச உயர்கல்விஜனவரி 16,2022,00:00 IST

எழுத்தின் அளவு :

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆதரவுடன், இங்கிலாந்தின் ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகம், ஸ்டெம் பிரிவுகளில் முதுநிலை படிப்பைத் தொடர ஆர்வமுள்ள இந்திய மாணவிகளுக்கு முழு உதவித்தொகை வழங்குகிறது.முக்கியத்துவம்: ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில், பெண்கள் உயர்கல்வி மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை விபரம்: ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆண்டு எம்.எஸ்சி., படிப்பிற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. முழு கல்விக் கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, விமானக் கட்டணம், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுக் கட்டணம், விசா விண்ணப்பம் ஆகிய செலவினங்கள் இதில் அடங்கும்.
துறைகள்:


* ஹெல்த் மற்றும் லைப் சயின்சஸ்


* கிளைமட் ஜேன்ஜ், என்விரான்மெண்ட் மற்றும் ரிஸ்க் ரிடக்‌ஷன்


* எனர்ஜி டிரான்சிஷன்


* இன்டஸ்ட்ரி 4.0 / டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன்தகுதிபெறும் படிப்புகள்:


எம்.எஸ்சி., - டிஜிட்டல் மானுபாக்சரிங்


எம்.எஸ்சி., - என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்


எம்.எஸ்சி., - சஸ்டைனபல் இன்ஜினியரிங்


எம்.எஸ்சி., - சஸ்டைனபலிட்டி அண்டு என்விரான்மெண்டல் ஸ்டடீஸ்


எம்.எஸ்சி., - விண்டு எனர்ஜி சிஸ்டம்


எ.ஆர்இஎஸ்., - கிளைமேட் ஜேன்ஜ் அடாப்ஷன்


எம்.எஸ்சி., - கிளினிக்கல் ஹெல்த் சைக்காலஜி


எல்.எல்.எம்., - குளோபல் என்விரான்மெண்டல் லா அண்டு கவர்னன்ஸ்


எம்.எஸ்சி., - அப்ளைடு ஸ்டேடிஸ்டிக்ஸ் இன் ஹெல்த் சயின்ஸ்


எம்.எஸ்சி., - ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் அண்டு அப்ளிகேஷன்ஸ்


எம்.எஸ்சி., - கிளினிக்கல் பார்மசி


எம்.எஸ்சி., - டிஜிட்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ்


எம்.எஸ்சி., - சாப்ட்வேர் டெவெலப்மெண்ட்


எம்.எஸ்சி., - எக்னாமிக்ஸ் அண்டு பாலிசி ஆப் எனர்ஜி 


எம்.எஸ்சி., - பினான்சியல் டெக்னாலஜி 


எம்.எஸ்சி., - ஹெல்த் அனாலிசிஸ், பாலிசி அண்டு மேனெஜ்மெண்ட்தகுதிகள்: உரிய கல்வித் தகுதி மற்றும் ஆங்கில மொழிப் புலமை பெற்ற இந்திய குடியுரிமை பெற்ற பெண்கள் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு: https://www.strath.ac.uk/studywithus/scholarships/britishcouncilwomeninstem/Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us