ஹாஸ்பிடல் அட்மினிஸ்டிரேஷன் என்பது இன்று முன்னணி படிப்புகளில் ஒன்று என்பதை இந்தப் பகுதியில் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறோம். உயிரியல்படிப்பவருக்கு இந்தப் படிப்பு நல்ல தேர்வு தான் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில் பிரபலமடைந்து வரும் பல படிப்புகளிலும் நல்ல படிப்பு என்பதை அறிந்து பலர் சேருகின்றனர் என்றாலும் நாம் எங்கு படிக்கிறோம் என்பதும் எப்படிப் படிக்கிறோம் என்பதும் முக்கியம்.
இன்ஜினியரிங் படிக்க விரும்புபவர்கள் நல்ல கல்லூரிகளைத் தேடுவதைப் போலவே இது போன்ற பிற படிப்புகளைப் படிக்க நினைப்பவரும் நல்லநிறுவனத்தில் படிக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும். அது போலவே இதைப் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்று குருட்டுத்தனமாக எந்தப் படிப்பிலும் சேரக்கூடாது.
உயிரியல் படிக்கும் நீங்கள் இந்தப் படிப்பின் அடிப்படைகளை நன்றாகப் புரிந்து கொண்டு படித்தால் கட்டாயம் இதில் நீங்கள் பிரகாசிக்கலாம்.