டோபல் தேர்வு | Kalvimalar - News

டோபல் தேர்வுஅக்டோபர் 18,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

பெரும்பாலும், வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக, தங்களது ஆங்கிலத் திறனை நிரூபிப்பதற்கான பலரது விருப்பமான தேர்வு டோபல் எனும் டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் ஏஸ் ஏ பாரின் லேங்குவேஜ்! 


முக்கியத்துவம்

உலகம் முழுவதிலும் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,500 ஆயிரம் பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கும் டோபல் தேர்வை ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.  குறிப்பாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள வெளிநாட்டு மாணவர் சேர்க்கை இடங்கள், டோபல் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. 


கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி, பணி வாய்ப்பு, விசா உட்பட பல்வேறு காரணங்களுக்கும் டோபல் மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது.


தேர்வு எழுதும் முறை:

இன்டர்நெட் பேஸ்டு டெஸ்ட் (ஐ.பி.டி.,) தேர்வு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்வு மையத்திலும் எழுதலாம்; டெஸ்ட் அட் ஹோம் திட்டம் மூலம் வீட்டில் இருந்தபடியேவும் எழுதலாம்; அல்லது பேப்பர் எடிஷன் வாயிலாகவும் எழுதலாம். 


குறிப்பு: முன்பு நடைமுறையில் இருந்த ’பேப்பர் டெலிவர்டு டெஸ்டிங்’ ஏப்ரல் 2021 முதல் வழங்கப்படுவதில்லை.


தேர்வு நேரம்:

வாசித்தல், கேட்டல், பேசுதல் மற்றும் எழுதுதல் உள்ளிட்ட  பகுதிகளில், ஒருங்கிணைந்த ஆங்கில மொழி திறன்களை ஆராயும் விதத்தில், டோபல் ஐ.பி.டி., தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும், டோபல் இணையதளம் மூலம் டோபல் - ஐ.பி.டி., தேர்வு நிர்வகிக்கப்படுகிறது. 


மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில், வாசித்தல் பகுதியில் 54 - 72 நிமிடங்கள், கேட்டல் பகுதியில் 41 - 57 நிமிடங்கள், பேசுதல் பகுதியில் 4 செயல் பயிற்சிகள் மற்றும் எழுதுதல் பகுதியில்  2 செயல் பயிற்சிகள் என மொத்தம் 3 மணி நேரங்களுக்கும் மேல் இத்தேர்வு நடைபெறும்.


ஆண்டுக்கு 60 முறைக்கு மேல் நடைபெறும் இத்தேர்வினை, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். டோபல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.


இதர தேர்வுகள்: பலதரப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்ப, டோபல் ஐ.டி.பி., டோபல் ஜூனியர், டோபல் பிரைமரி ஆகிய தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. 


விபரங்களுக்கு: www.ets.org


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us