நமது குறிக்கோள் இன்ஜினியரிங் என்றே பொதுவாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நினைக்கும் போது ராணுவப் பணியைப் பற்றி ஆர்வமுடையவராக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பிளஸ் 2ல் இயற்பியல், கணிதம், வேதியியல் படிப்பவர்கள் தரைப்படை நடத்தும் பிளஸ் 2 டெக்னிகல் என்ட்ரி ஸ்கீம் மூலமாக சிறப்புப் பயிற்சி பெற்று பின்பு நேரடியாக அதிகாரியாகப் பணியில் அமர முடியும்.
பிளஸ் 2ல் இந்தப் பாடங்களைப் படிக்காதவரும் என். டி. ஏ., நடத்தும் தேர்வு எழுதித் தகுதி பெற்றால் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று பின்பு அதிகாரியாக பணி புரியலாம். நமது இணையதளத்தில் இவை பற்றிய செய்திகளை வெளியிடுகிறோம். கவனித்து விண்ணப்பிக்கவும்.