பி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

பி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும். செப்டம்பர் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அசோசியேட் மெம்பர்சிப் ஆப் இன்ஸ்டிடியூசன் ஆப் இன்ஜினியர்ஸ் என்பதே ஏ.எம்.ஐ.ஈயின் விரிவாகும். நேரடி முறையில் பி.இ., பி.டெக். படிக்க முடியாதவருக்கு முறையான இன்ஜினியரிங் பட்டத்தை தருகிறது ஏ.எம்.ஐ.ஈ. ஏ.ஐ.சி.டி.ஈ., யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தகுதி ஏ.எம்.ஐ.ஈ. ஆகும். இதில் தகுதி பெறுபவர்கள் சிவில் சர்விசஸ், இன்ஜினியரிங் சர்விசஸ், கேட், ஜி.ஆர்.ஈ. போன்ற தேர்வுகள் எழுதவும் முடியும். இதை நடத்துவது இன்ஸ்டிடியூசன் ஆப் இன்ஜினியர்ஸ் என்னும் அமைப்பு.

இது கோல்கட்டாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 18 மாநில தலைநகரங்களிலும் 76 பிற மையங்களிலும் ஏ.எம்.ஐ.ஈ.யின் மையங்கள் செயல்படுகின்றன.

ஏ.எம்.ஐ.ஈயில் செக்சன் ஏ மற்றும் செக்ஷன் பி என 2 பிரிவுகள் உண்டு. செக்ஷன் ஏ அனைவருக்கும் பொதுவானது. செக்ஷன் பியில் உங்களுக்கான இன்ஜினியரிங் முக்கிய பாடத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆண்டுக்கு 2 தடவை ஏ.எம்.ஐ.ஈ. தேர்வு நடத்தப்படுகிறது. முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவேண்டும். பின்பு தான் தேர்வை எழுத முடியும். இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களுடன் +2வை குறைந்தது 45% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சியை இந்த பாடங்களில் ஒன்றோடு முடித்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us