எம்.சி.ஏ.டி., | Kalvimalar - News

எம்.சி.ஏ.டி., ஆகஸ்ட் 10,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட 19 நாடுகளில் மருத்துவப் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய முக்கிய தேர்வுகளில் எம்.சி.ஏ.டி., எனும் மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் டெஸ்ட்.


அறிமுகம்

அசோசியேஷன் ஆப் அமெரிக்கன் மெடிக்கல் காலேஜ்ஸ் எனும் கூட்டமைப்பு கடந்த 1928ம் ஆண்டு முதல் இத்தேர்வை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் செயல்படும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தப்படுகின்றன. பொதுவாக, ஆண்டுக்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 


படிப்புகள்: 

டாக்டர் ஆப் மெடிசின் - எம்.டி.,

டாக்டர் ஆப் ஆஸ்டோபதிக் மெடிசின் -டி.ஓ.,

டாக்டர் ஆப் பிசிக்கல் மெடிசின் அல்லது டாக்டர் ஆப் பொடியட்ரிக் மெடிசின் - டி.பி.எம்.,

டாக்டர் ஆப் வெட்ரினரி மெடிசின் - டி.வி.எம்.,

மற்றும் இதர மருத்துவ படிப்புகளுக்கும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்  வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.


தேர்வு முறை: முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலான இத்தேர்வில், மல்டிபில் சாய்ஸ் வகை கேள்விகள் மட்டுமே இடம்பெறும். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் மற்றும் மருத்துவ துறைக்கு மிகவும் அவசியமான உடற்கூறு அறிவியல், உயிரியல் போன்ற பாடங்களில் உள்ள அறிவும் இத்தேர்வில் பரிசோதிக்கப்படுகிறது. 


குறிப்பாக, பின்வரும் நான்கு வகையான பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்:

1. பயோலஜிக்கல் அண்ட் பயோகெமிஸ்ட்ரி பவுண்டேஷன்ஸ் ஆப் லிவிங் சிஸ்டம்ஸ் - 95 நிமிடங்கள்

2. கெமிக்கல் அண்ட் பிசிக்கல் பவுண்டேஷன்ஸ் ஆப் பயோலஜிக்கல் சிஸ்டம்ஸ் - 95 நிமிடங்கள்

3. சைக்காலாஜிக்கல், சோசியல் அண்ட் பயோலஜிக்கல் பவுண்டேஷன்ஸ் ஆப் பிகேவியர் - 95 நிமிடங்கள்

4. கிரிட்டிக்கல் அனலைசிஸ் அண்ட் ரீசனிங் ஸ்கில்ஸ் - 90 நிமிடங்கள்

ஒவ்வொரு பிரிவுகளுக்கும் இடையில் இடைவேளை உண்டு. சான்றிதழ் சரிபார்ப்பு, இடைவேளை நேரம் உட்பட மொத்த தேர்வு நேரம் ஏழரை மணிநேரம்.


தேர்வு வரையறை:

ஒரு மாணவர் ஆண்டுக்கு 3 முறை வரை இத்தேர்வை எழுதலாம். அதேநேரம், அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 முறைக்கு மேல் எழுத முடியாது. மேலும், ஒரு மாணவர் அவரது வாழ்நாளில் 7 முறைக்கும் மேல் இத்தேர்வை எழுத முடியாது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை தேர்வு மதிப்பெண் செல்லுபடியாகும்.


விபரங்களுக்கு:  https://students-residents.aamc.org


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us