சமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா? | Kalvimalar - News

சமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா?ஆகஸ்ட் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த சில மாதங்களாகவே பாங்க் பிஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. எனவே தற்போது போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் இந்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

பிஓ தேர்வுகளில் பொதுவாக அப்ஜக்டிவ் முறை தேர்வு ஒரு தாளாகவும், விரிவாக விடையளிப்பது மற்றொரு தாளாகவும் கேட்கப்படுகிறது. அப்ஜக்டிவ் தாளில் பின்வரும் பகுதிகளில் இருந்து கேள்விகள் அமைகின்றன.
* டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் லாங்வேஜ்
* டெஸ்ட் ஆப் ரீசனிங்
* டெஸ்ட் ஆப் குவான்டிடேடிவ் ஆப்டிடியூட்
* டெஸ்ட் ஆப் ஜெனரல் நாலெட்ஜ்
மிக அதிகமான கேள்விகள் பிஓ தேர்வுகளைப் பொறுத்த வரை ரீசனிங் பகுதியிலிருந்தே அமைகின்றன. அனைத்து பகுதிகளையும் நமது சராசரி இளைஞர்கள் கடினமாகவே உணருகின்றனர். பயிற்சி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சி பெறுபவர்கள் தான் பிஓ தேர்வுகளில் அதிகம் வெற்றி பெறுகின்றனர். இப்படி வெற்றி பெறுபவர்களில் டில்லி, மும்பை போன்ற இடங்களிலிருந்து தான் அதிகம் பேர் வெற்றி பெற்று வந்தனர். ஆனால் சமீப காலமாக மதுரை போன்ற நகரங்களில் இயங்கும் ஒரு சில பயிற்சி நிறுவனங்களில் படிப்பவர்கள் அதிகமாக இது போன்ற பி.ஓ. தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • வீட்டில் தனியாகவோ நண்பர்களுடனோ பயிற்சியை மேற்கொண்டு பிஓ தேர்வுக்கு தயாராகுபவர்கள் பின் வரும் புத்தகங்களை வைத்துப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
  • கணிதம் மற்றும் ரீசனிங் பகுதிகளுக்கு ஆர்.எஸ்.அகர்வாலின் தனித் தனி புத்தகங்கள் சிறப்பான பலனைத் தரும்.
  • ஆங்கிலத்திற்கு தில்லான் குருப் ஆப் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள புத்தகங்கள் உதவும்.
  • பொது அறிவைப் பொறுத்த வரை அரிஹந்த் பப்ளிகேஷன்ஸ் புத்தகங்கள் உதவும். கன்னா பிரதர்ஸ் பப்ளிஷர்ஸின் ஜெனரல் நாலெட்ஜ் ரெப்ரஷர் புத்தகமும் உதவும்.
  • ஜெனரல் நாலெட்ஜ் டுடே மற்றும் பாங்கிங் சர்வீசஸ் கிரானிகிள் மாதப் பத்திரிகை ஆகியவை பயிற்சி கேள்விகளை நிறைய தருகின்றன.
  • விரிவாக விடையளிக்கும் பகுதியில் சமீபத்தில் ரிசர்வ் பாங்க் மற்றும் பிற பி.ஓ. தேர்வுகளில் சமூக பொருளாதாரப் பிரச்னைகள் பற்றிய கேள்விகள் இடம் பெறுகின்றன. இதற்கு அடிப்படையில் நாளிதழ்கள் படிப்பதும், காம்படிஷன் மாஸ்டர் பத்திரிகையில் வெளியிடப்படும் மாதிரி வினா விடைகளும் மிகவும் உதவும்.

பிஓ தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண்கள் தரப்படுவதால் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதும். பிஓ தேர்வுகளில் வெற்றி பெற மிக முக்கியமான மற்றொரு டெக்னிக்காக நேரத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவதைக் குறிப்பிடலாம்.

ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 2 கேள்விகளுக்கும் மேல் பதிலளிக்க வேண்டியிருப்பதால் மிக நன்றாக தெரிந்த கேள்விகள் அனைத்திற்கும் முதலில் விடையளிப்பதும் எந்த ஒரு குறிப்பிட்ட கேள்வியிலும் அதிக நேரத்தைச் செலவிடாமலிருப்பதும் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவை. அன்றாடம் வீட்டில் அல்லது பயிற்சி மையத்தில் நேரம் குறித்துக் கொண்டு விடையளித்துப் பழகுவது இதற்கு உதவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us