பக்ளர், பிராஸ் பேண்ட், பிட்டர் போன்ற பணி வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற உடற்திறனறியும் தேர்வுகளில் வெற்றி பெறுவது அவசியம்.
தட்டையான பாதம், தட்டும் முழங்கால்களைப் பெற்றிருக்கக் கூடாது. மருத்துவத் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பக்ளர் பணிக்கு பிட்டர், மோட்டார் வெகிகிள் போன்ற ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இதில் 11 அடி நீளம் தாண்டுதல், 3 அடி 6 இஞ்ச் உயரம் தாண்டுதல், 6 நிமிடம் 30 விநாடிகளில் ஒரு மைல் தூரம் ஓடுதல் ஆகியவற்றில் வெற்றி பெறுவது அவசியமாகும். இவற்றில் தேர்ச்சி பெறுவோருக்குத்தான் எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.
பொது அறிவு, பொது அறிவியல், அடிப்படை எண் கணிதம், ரீசனிங் போன்றவற்றில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதைத் தவிர விரிவாக விடையளிக்கும் பகுதியும் உண்டு.