ஆக்ஸ்போர்டு பல்கலை | Kalvimalar - News

ஆக்ஸ்போர்டு பல்கலைஜூன் 15,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச அளவில் மிகச் சிறந்த மற்றும் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களாலும் சேர்க்கை பெற முடியும்!


முக்கியத்துவம்:

கடந்த 1096ம் ஆண்டில் ஒரு சாதாரணமாக துவங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த 10 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ், 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 24 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 7 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் இதர திறனாளர்கள் இப்பல்கலையில் பணியாற்றுகின்றனர். 


மாணவர் சேர்க்கை பிரிவுகள்:

12ம் வகுப்பு பயின்ற மாணவரகளுக்காக அண்டர் கிராஜுவேட் பிரிவின் கீழ் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளநிலை பட்டப்படிப்புகளை முடித்த மாணவர்களுக்காக கிராஜூவேட் முதுநிலை, ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.


முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கும், நேரடியாக கல்வி நிறுவனத்திற்கு சென்று பயில இயலாதவரக்ளுக்கும் கன்ட்டுனியுங் எஜுகேஷன் பிரிவின் கீழ் பகுதி நேர மற்றும் ஆன்லைன் முறையில் பல்வேறு இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.


படிப்புகள்:

ஆர்க்கியாலஜி, ஆந்த்ரோபாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோலஜி, கெமிஸ்ட்ரி, இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எர்த் சயின்ஸ், இன் ஜினியரிங், லேங்குவேஜ் அண்ட் லிட்ரெச்சர், பைன் ஆர்ட்ஸ், ஜியாகிரபி, ஹிஸ்ட்ரி, லா, மெட்டீரியல் சயின்ஸ், மேத்மெடிக்ஸ், மெடிசின், மியூசிக், பிலாஷபி, பிசிக்ஸ், மேனேஜ்மெண்ட், ஸ்டேட்ஸ்டிக்ஸ், பிளாண்ட் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், நியூரோசயின்ச், பார்மகாலஜி, சைக்யாட்ரி, பேத்தாலஜி, பாப்புலேஷன் ஹெல்த், கிரிமினாலஜி, எக்னாமிக்ஸ், எஜுகேஷன், கிரிமினாலஜி, சோசியாலஜி, லா, ஹெல்த் சயின்சஸ், சோசியல் சயின்சஸ், ஹுமானிட்டிக்ஸ் என பல்வேறு துறைகளின் கீழ் நூற்றுக்கணக்கான படிப்புகள் வழங்கப்படுகின்றன.


சேர்க்கை முறை:

படிப்புகளுக்கு உரிய கல்வித் தகுதியுடன், துறைக்கு ஏற்ப தகுதி தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் ஆங்கில மொழி புலமை தேர்வு ஆகியவையும், அவற்றில் எதிர்பார்க்கப்படும் மதிப்பெண்களும் மாறுபடும். இவை தவிர பெரும்பாலும் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது. தற்போதைய பெருந்தோற்று காலத்தில் அனைத்து மாணவர் சேர்க்கை நடைமுறைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படுகிறது.


முக்கிய கல்வித் தகுதிகள்: 

இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, சி.பி.எஸ்.இ., அல்லது மாநில கல்விப் பாடத்திட்டத்தில் பயின்று, 12ம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, டோபல் / ஐ.இ.எல்.டி.எஸ்., / கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி புலமைத்தேர்வு போன்ற ஏதேனும் ஒன்றில் சிறந்த மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். இவை தவிர, துறை சார்ந்த தேர்வையும் எழுத வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும் தகுதித் தேர்வும், ஆங்கில மொழிப் புலமை தேர்வும் அவசியம். இப்பல்கலைக்கழகத்தில் ஏராளமான உதவித்தொகை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


விபரங்களுக்கு: www.ox.ac.uk


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us