குளோபல் மாஸ்டர்ஸ் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

குளோபல் மாஸ்டர்ஸ் ஸ்காலர்ஷிப்ஜூன் 15,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச மாணவர்களின் உயர்கல்விக்காக யு.கே.,வின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிர்மிங்கம் பல்கலைக்கழகம் வழங்கும் பிரத்யேக உதவித்தொகை திட்டமே குளோபல் மாஸ்டர்ஸ் ஸ்காலர்ஷிப்!


முக்கியத்துவம்:

உலகெங்கிலும் இருந்து முதுநிலை படிப்பை மேற்கொள்வதற்காக பிர்மிங்கம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். 2021-22ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


யு.கே., அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனமாக கல்வி தரத்தைக் கொண்டுள்ள இப்பல்கலையில், அக்கவுண்டிங், பினான்ஸ், பயோ இன்பர்மேட்டிக்ஸ், இண்டர்நேஷனல் பிசினஸ், இன்ஜினியரிங், எஜுகேஷன், பிலிம் அண்ட் டெலிவிஷன், ஹெல்த்கேர், லா, மேனேஜ்மெண்ட், நானோசயின்ஸ், ரோபாட்டிக்ஸ், சோசியல் சயின்சஸ் உட்பட ஏராளமான பிரிவுகளில் 600க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது.


தகுதிகள்:

பர்மிங்காம் பிசினஸ் ஸ்கூலில் வழங்கப்படும், எம்.எஸ்சி., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை தவிர்த்து, பிற அனைத்து முதுநிலை படிப்புகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆகவே, பர்மிங்காம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கல்வியாண்டின், செப்டம்பர் / அக்டோபர் துவங்கும் பாடத்திட்டங்களில், ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். தங்களது பட்டப்படிப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதியானவர்கள். 


குறிப்பு: பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முழுநேர முதுநிலை படிப்புகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தொலைநிலை கல்வி முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பொருந்தாது.


உதவித்தொகை விபரம்: தேர்வு செய்யப்படும் மாணவர்கள், 10 ஆயிரம் பவுண்டுகள் வரை கல்விக் கட்டணத்தில் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


மொத்த எண்ணிக்கை: 30 சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை: பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை: மாணவர்களின் மதிப்பெண் மற்றும் கல்வி திறனின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகைக்கு தகுதியான மாணவரக்ள் தேர்வு செய்யப்படுவர்.


விபரங்களுக்கு: www.birmingham.ac.uk


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us