ஒரு படிப்பைப் படிப்பதால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று தற்போதைய சூழல் எந்த படிப்பையும் சொல்ல முடியாது. குறிப்பிட்டபடிப்புகள் வெறும் தகுதியை மட்டுமே தருகின்றன. இதைப் படிக்கும் போதே உங்களது பன்முகத் திறன்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம்.
பகுத்தறிவுத் திறன், பொது அறிவு, கூர்மையாக செயல்படும் திறன், கணிதத் திறன் போன்ற திறன்களை போதிய பயிற்சி மூலமாகப் பெறுவதுடன் இரண்டு அல்லது 3 வேலைகளுக்கேற்ப உங்களது கூடுதல் தகுதிகளைப் பெறுவதும் மிக முக்கியம். போட்டித் தேர்வுகளை உடனே எழுதத் தொடங்குங்கள்.
தட்டச்சு, கம்ப்யூட்டர் திறன், நல்ல ஆங்கில தகவல் தொடர்புத் திறன் போன்றவற்றுடன் உங்களது ஆர்வத்துக்கேற்ப கூடுதல் திறன்களைப் பெற முயற்சிக்கவும்.