ஓ.சி.எஸ்.ஐ., உதவித்தொகை | Kalvimalar - News

ஓ.சி.எஸ்.ஐ., உதவித்தொகைஜூன் 15,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட, தி ஆக்ஸ்போர்டு அண்டு கேம்ப்ரிட்ஜ் சொசைட்டி ஆப் இந்தியா - ஓ.சி.எஸ்.ஐ., எனும் புதுடில்லியை சேர்ந்த லாப நோக்கமற்ற முன்னாள் மாணவர்கள் அமைப்பு, புகழ்பெற்ற இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.


படிப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்:

யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் மற்றும் யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்டு ஆகிய யு.கே.,வில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு துறையிலும், இளநிலை பட்டப்படிப்பு, இரண்டாம் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, பிஎச்.டி., ஆகிய படிப்புகளில் சேர்க்கை பெறும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை விபரம்:

* ஓ.சி.எஸ்.ஐ., கே.கே. லுத்ரா மெமோரியல் ஸ்காலர்ஷிப் மற்றும் ஓ.சி.எஸ்.ஐ., அனிதா பானர்ஜி மெமோரியல் ஸ்காலர்ஷிப் ஆகிய திட்டங்களில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் 2 மாணவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


* ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மேலும் 4 மாணவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் ஓ.சி.எஸ்.ஐ., ஸ்காலர்ஷிப் திட்டத்தில் வழங்கப்படுகிறது.


* கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இம்மானுவேல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை


* செயின்ட் ஹில்டா கல்லூரி, ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை


தகுதிகள்:

* இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் குடியிருக்கும் மாணவராகவும் இருத்தல் வேண்டும்.

* 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* இந்திய கல்வி நிறுவனங்களில் படித்தவராக இருப்பதும் அவசியம்.


தேர்வு செய்யப்படும் முறை: இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதில் பாலினம், நிறம், மதம், உடல் ஊனம் ஆகியவற்றிற்கு எந்தவிதத்திலும் முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது. 


விபரங்களுக்கு: www.oxbridgeindia.com/scholarships


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us