கிரேட் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

கிரேட் ஸ்காலர்ஷிப்ஏப்ரல் 18,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

பிரிட்டனில் படிக்க சிறந்த வாய்ப்பை கிரேட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் அந்நாட்டு அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 



இந்த திட்டத்தை பயன்படுத்தி யு.கே.,வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால் உயர்கல்வியை பெற முடியும். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இந்த உயர்கல்வி வாய்ப்பை பெறலாம். கிரேட் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் கிட்டத்தட்ட 60 வகையான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி, ஓர் ஆண்டு முதுநிலை படிப்புக்கான கல்விக் கட்டணத்திற்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படுகிறது. 




தகுதிகள்:



இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள அதற்குரிய படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப இளநிலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர் சேர்க்கையை பெற வேண்டும். யு.கே., உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பது அவசியம்.




2021-22 கல்வியாண்டில் கிரேட் ஸ்காலர்ஷிப் வழங்கும் பல்கலைக்கழகங்கள்:



பிஷப் க்ரோசெட்டெஸ்டே பல்கலைக்கழகம்



கிரான்பீல்ட் பல்கலைக்கழகம்



எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகம்



கோல்ட்ஸ்மித்ஸ், லண்டன் பல்கலைக்கழகம்



இம்பீரியல் கல்லூரி



நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகம்



ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம்



ஷெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம்



ராயல் வேளாண் பல்கலைக்கழகம்



ஸெப்பீல்டு ஹலாம் பல்கலைக்கழகம்



ஸ்டாபோர்ட்ஷயர் பல்கலைக்கழகம்



உல்ஸ்டர் பல்கலைக்கழகம்



லண்டன் பல்கலைக்கழக கல்லூரி



கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்



டெர்பி பல்கலைக்கழகம்



டண்டீ பல்கலைக்கழகம்



கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்



எடின்பர்க் பல்கலைக்கழகம்



கென்ட் பல்கலைக்கழகம்



மான்செஸ்டர் பல்கலைக்கழகம்



வார்விக் பல்கலைக்கழகம்



உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கு கிரேட் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை வழங்குகின்றன.



விண்ணப்பிக்கும் முறை:



இந்தியாவுக்காக பட்டியலிட்டுள்ள பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து அதன் இணையதளத்தின், ஸ்காலர்ஷிப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தனிப்பட்ட முறையில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 



உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஏற்ப மாறுபடும். 



விபரங்களுக்கு: www.britishcouncil.in/study-uk/scholarships/great-scholarships



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us