சிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதா என அறிய விரும்புகிறேன். | Kalvimalar - News

சிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதா என அறிய விரும்புகிறேன்.ஆகஸ்ட் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆம். மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. பிரதமரின் சிறுபான்மையினருக்கான சிறப்பு 15 அம்சக் கொள்கைகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையில் 30% மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை சமீபத்தில் மத்திய அரசு தந்துள்ளது.

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிப்பவர் இதற்கு தகுதியானவர்கள். ஏற்கனவே இது போன்ற சிறுபான்மையினருக்கான உதவித் தொகை 17 ஆயிரத்து 182 பேருக்கு தரப்பட்டு வந்தது. இனி கூடுதலாக 20 ஆயிரம் பேர் இதைப் பெறலாம். 10ம் வகுப்பு முடித்து தற்போது பிளஸ் 1 படிப்பவர் தொடங்கி பி.எச்டி. வரைக்குமான படிப்புகளுக்கும் மத்திய அரசு இந்த உதவித் தொகையைத்தரவிருக்கிறது.

11வது ஐந்தாண்டு திட்டத்துக்குள் 15 லட்சம் உதவித் தொகைகளை சிறுபான்மையினருக்குத் தரவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் நுழைவுக் கட்டணம் மற்றும் பயிற்சிக் கட்டணம் போன்ற செலவுகள் அடங்கும். இந்த உதவித் தொகையின் ஒரு பகுதியாக தொழிற்படிப்புகளில் சேர உதவும் சிறப்புப் பயிற்சிகளும் தரப்படவுள்ளன. எனவே நாளிதழ்களை கவனித்து வரவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us