இன்லேக்ஸ் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

இன்லேக்ஸ் ஸ்காலர்ஷிப்மார்ச் 03,2020,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற விரும்பும் சிறந்த இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் இன்லேக்ஸ் ஸ்காலர்ஷிப்


இம்பெரியல் காலேஜ் லண்டன், ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் - லண்டன், ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்டு ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் - லண்டன், யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவித்தொகையை வழங்கப்படுகிறது. சிறந்த இளம் இந்திய மாணவர்களது திறமையை மேலும் மேம்படுத்தும் வகையில் 1976ம் ஆண்டு முதல் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


படிப்பு நிலைகள்: முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., 


துறைகள்: 


இன்ஜினியரிங், 

கம்ப்யூட்டர் சயின்ஸ், 

பிசினஸ் ஸ்டடீஷ், 

மெடிசின், டென்டிஸ்ட்ரி, 

பப்ளிக் ஹெல்த், 

பேஷன் டிசைன், 

மியூசிக், 

பிலிம் அண்டு பிலிம் அனிமேஷன்.


உதவித்தொகை:

கல்விக் கட்டணம், தங்குமிட செலவு, போக்குவரத்து செலவு, மருத்துவ காப்பீடு ஆகியவை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 72 லட்சம் ரூபாயை பெறலாம்.


தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது கடந்த 6 மாத காலமாக  இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.  ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். 


வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:  இரண்டு பரிந்துரை கடிதங்களுடன் ஆன்லைன் /  applications@inlaksfoundation.org இ-மெயில் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பொதுவாக, மும்பை அல்லது டில்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.


விபரங்களுக்கு: www.inlaksfoundation.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us