கிரேட் ஸ்காலர்ஷிப் 2020 | Kalvimalar - News

கிரேட் ஸ்காலர்ஷிப் 2020 பிப்ரவரி 10,2020,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்கள் உதவித்தொகையுடன் பிரிட்டனில் படிக்க சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் யு.கே.,வின் பிரபல கிரேட் ஸ்காலர்ஷிப் -2020 திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது.

உதவித்தொகை திட்டம்:
இந்த உதவித்தொகையை பெறுவதன் மூலம் யு.கே.வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால் உயர்கல்வியை பெற முடியும். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இந்த உயர்கல்வி வாய்ப்பை பெறலாம்.

பொதுவான தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உரிய கால அவகாசம் உள்ள இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பது அவசியம். 
* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள அதற்குரிய படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப இளநிலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். 
* யு.கே., உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பது அவசியம்.  அதாவது, உரிய ஆங்கில மொழி புலமை பரிசோதனை தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
* இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர் சேர்க்கையை பெற வேண்டும். 
 
குறிப்பு: பங்குபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப படிப்புகள், விண்ணப்பிக்கும் தேதிகள், உதவித்தொகைகள் மாறுபடும். மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திற்கு நேரடியாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பங்கு பெறும் கல்வி நிறுவனங்கள்:
* இம்பெரியல் காலேஜ் லண்டன்: யு.கே.,வில் அறிவியல், மருத்துவம், இன்ஜினியரிங் மற்றும் வணிகம் ஆகிய படிப்புகளை வழங்கும் பிரதான கல்வி நிறுவனம். சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இக்கல்வி நிறுவனம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

உதவித்தொகை விபரம்: சுமார் 8 லட்சம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 6

விபரங்களுக்கு: www.imperial.ac.uk

* கிரான்பீல்டு யுனிவர்சிட்டி: உலகத்தரம் வாய்ந்த பேராசிரியர்கள் நிறைந்த இப்பல்கலையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகள் நவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஏரோநாட்டிக்ஸ், ஏர்கிராப்ட் டிசைன், ஏவியானிக்ஸ், தெர்மல் பவர் படிப்புகள் இங்கு பிரபலமானவை.

உதவித்தொகை வழங்கப்படும் துறைகள்: எனர்ஜி, அக்ரிபுட், என்விரான்மென்ட், வாட்டர், டிசைன், மேனுபாக்சரிங், ஏரோஸ்பேஸ் அல்லது டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்ஸ்

உதவித்தொகை விபரம்: 8.66 லட்சம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 1

விபரங்களுக்கு: www.cranfield.ac.uk/funding/funding-opportunities/great-cranfield-university-scholarship-india


* நியூகேசில் யுனிவர்சிட்டி: சர்வதேச சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பட்ட பாடத்திட்டத்தை கொண்டு கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்பல்கலைக்கழகம் மாணவர்கள் மத்தியில் புத்தாக்க சிந்தனைகளையும், அறிவையும் புகட்டுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 

உதவித்தொகை வழங்கப்படும் துறைகள்: அனைத்து துறை முதுநிலை பட்டப்படிப்புகள்.

உதவித்தொகை விபரம்: 7.87 லட்சம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: www.ncl.ac.uk/postgraduate/funding/sources/internationalnoneustudents/nugreat20.html


* ராபர்ட் கார்டன் யுனிவர்சிட்டி: 132 நாடுகளை சேர்ந்த 16 ஆயிரம் மாணவர்களைக் கொண்டு செயல்படும் இப்பல்கலைக்கழகம் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பாடத்திட்டத்தை வழங்குகிறது. 

உதவித்தொகை வழங்கப்படும் துறைகள்: அனைத்து துறை முழுநேர முதுநிலை பட்டப்படிப்புகள்.

உதவித்தொகை விபரம்: 7.87 லட்சம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: www.rgu.ac.uk/study/finance-funding/funding-and-scholarships/2388-great-scholarship-2020


* செப்பீல்டு ஹலாம் யுனிவர்சிட்டி: யு.கே.வின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இப்பல்கலையில் 120 நாடுகளை சேர்ந்த 31 ஆயிரம் மாணவர்கல் கல்வி பெறுகின்றனர். அடிப்படை, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும் இக்கல்வி நிறுவனத்தில் கேஸ் ஸ்டடீஸ் வாயிலான கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

உதவித்தொகை விபரம்: சுமார் 8 லட்சம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

விபரங்களுக்கு: www.shu.ac.uk


* தி யுனிவர்சிட்டி ஆப் பாத்: கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு பெயர் பெற்ற இப்பல்கலைக்கழகம் யு.கே.,வின் சிறந்த 10 பல்கலைக்கழகத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு சிறந்த கல்வி அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் இக்கல்வி நிறுவனம் யு.கே.,வின் பாதுகாப்பான கல்வி நிறுவனங்களில் ஒன்று. இன் ஜினியரிங் அண்ட் டிசைன், ஹுமானிட்டீஸ் அண்டு சோசியல் சயின்சஸ், சயின்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் ஆகிய துறைகளில் முதுநிலை படிப்பை மேற்கொள்ளும்  மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை விபரம்: சுமார் 19.6 லட்சம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 27

விபரங்களுக்கு: www.bath.ac.uk/campaigns/great-scholarships-2020-india


* தி யுனிவர்சிட்டி ஆப் மான்செஸ்டர்: ருசெல் குழும கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான இப்பல்கலை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு படித்தவர்கள் மற்றும் பணிபரிந்தவர்களில் இதுவரை 25 பேர் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். ஐரோப்பியாவின் 8வது சிறந்த கல்வி நிறுவனமாகவும், யு.கே.,வின் 6வது சிறந்த கல்வி நிறுவனமாகவும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளதோடு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் சர்வதேச மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பளித்து வருகிறது.

விபரங்களுக்கு: www.manchester.ac.uk/study/international/finance/funding/great-scholarships


* தி யுனிவர்சிட்டி ஆப் வார்விக்: மொத்தம் 70 ஆராய்ச்சி மையம் மற்றும் 26 ஆயிரம் மாணவர்களுடன் செயல்படும் இப்பல்கலை, அட்வான்ஸ்டு மெக்கானிக்கல்  இன்ஜினியரிங், பயோமெடிக்கல்  இன்ஜினியரிங், கம்யூனிகேஷன்ஸ் அண்டு இன்பர்மேஷன்  இன்ஜினியரிங், எல்க்ட்ரிக்கல் பவர்  இன்ஜினியரிங், சஸ்டயினபிள் எனர்ஜி டெக்னாலஜிஸ், டூனிங் அண்டு அன்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் மற்றும் ஹுமானிடேரியன்  இன்ஜினியரிங் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு கிரேட் உதவித்தொகையை வழங்குகிறது.

உதவித்தொகை விபரம்: சுமார் 15.70 லட்சம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: https://warwick.ac.uk/study/international/admissions/finance/scholarships

* யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஏஞ்சிலா: சர்வதேச புகழ்பெற்ற இப்பல்கலைக்கழகம், தி டைம்ஸ் குட் யுனிவர்சிட்டி கைடு 2019-ன் படி 15வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வேர்ல்டு யுனிவர்சிட்டி ரேங்கிங் 2019-ன் படி உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. தரமான கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு அமைப்பை கொண்டுள்ள இப்பல்கலையில் மொத்தம்15 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

உதவித்தொகை விபரம்: 11.88 லட்சம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 17

விபரங்களுக்கு: www.uea.ac.uk/study/international/fees-and-funding/external-scholarships


* யுனிவர்சிட்டி ஆப் கென்ட்: 140 நாடுகளை சேர்ந்த மாணவர்களை கொண்ட இப்பல்கலையில் 100 இந்திய மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர். கேண்டர்பரி, மெட்வே மற்றும் மெயின்லேண்ட் ஐரோப்பிய பகுதிகளில் கல்வி வளாகங்களுடன் சர்வதேச அங்கீகாரமிக்க படிப்புகளை வழங்கிவருகிறது. சிறந்த ஆசிரியர்களுடன் உலகத் தரமிக்க ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

உதவித்தொகை விபரம்: 8 லட்சம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: www.kent.ac.uk/scholarships/search/FNADCGREAT02


* யுனிவர்சிட்டி ஆப் நாட்டிங்காம்: 2020ம் ஆண்டிற்கான க்யூ.எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையின் படி உலகின் தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகத்தின் பட்டியிலில் இடம்பெற்றுள்ள இப்பல்கலை, யு.கே.,வின் சிறந்த 25 கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. 150 நாடுகளை சேர்ந்த 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பெறும் இப்பல்கலையின் கல்வி வளாகங்கள் யு.கே.,வில் மட்டுமின்றி, சீனா மற்றும் மலேசியாவிலும் உள்ளன. 

உதவித்தொகை விபரம்: 8 லட்சம் ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10

விபரங்களுக்கு: www.nottingham.ac.uk/studywithus/international-applicants/scholarships-fees-and-finance

இவ்வாறு 35க்கும் மேற்பட்ட யு.கே., கல்வி நிறுவனங்களில் கிரேட்உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக இக்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிப்பதன் வாயிலாக இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்த அனைத்து விபரங்களுக்கும் www.britishcouncil.in/study-uk/scholarships எனும் பிரிட்டிஷ் கவுன்சில் இணையதளத்தை பார்க்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us