ஆன்லைனில் ஏ.ஐ., படிப்பு | Kalvimalar - News

ஆன்லைனில் ஏ.ஐ., படிப்புநவம்பர் 21,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், ஆன்லைன் வாயிலாக ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் படிப்பை வழங்குகிறது.


படிப்பு: ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் கிராஜுவேட் சர்ட்டிபிகேட்


படிப்பு காலம்: ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான கால அளவு கொண்ட இந்த படிப்பை அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய வேண்டும்.


முக்கியத்துவம்: 

புதிய மின்சாரம் என்று போற்றப்படும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் துறை இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதையும், எதிர்கால வாய்ப்புகளையும் உணர்ந்த, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், ஆன்லைன் வாயிலாக, விர்ச்சுவல் வகுப்பறையாக இந்த படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், கம்ப்யூட்டேஷனல் லாஜிக் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் அடிப்படை முதல் மேம்படுத்தப்பட்ட திறன்களை வளர்க்கும் நோக்கில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டான்போர்டு கூறுகிறது. மேலும், ரோபாட்டிக்ஸ், விஷன், நேச்சுரல் லேங்குவேஜ் புராசசிங் ஆகியவற்றிலும் ஆழமான அறிவை வளர்க்கும் வகையில் கூடுதல் பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.


யார் படிக்கலாம்?

ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் துறையில் ஆர்வமுள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அல்லது புள்ளியியல், லீனியர் அல்ஜிப்ரா, ஜவா, சி++, பைத்தான் உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட அனுபவம் உள்ள பட்டதாரிகள் இந்த படிப்பை படிக்கலாம். 


கல்விக் கட்டணம்:

கிராஜுவேட் படிப்பில் குறைந்தது 3 முதல் அதிகபட்சம் 5 பாடங்கள் (கிரெடிட் யூனிட்) வரை மாணவர்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து படிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 1,300 அமெரிக்க டாலர் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மூன்று பாடங்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 2 லட்சத்து 80 ஆயிரத்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.


கிராஜுவேட் கோர்ஸ் படிப்பு மட்டுமின்றி, புரொபஷனல் கோர்ஸ், கார்ப்ரேட் எஜுகேஷன் என வெவ்வேறு பிரிவுகளிலும், தகுதியுடையவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப படிப்புகளை தேர்வு செய்யலாம். இதற்கான கட்டணம் வேறுபடுகின்ற போதிலும், குழுவாக சேர்க்கை பெறுகையில் கட்டணத்தில் சிறிய சலுகை உண்டு. மேலும், 24/7 எந்நேரமும் பாடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.


விபரங்களுக்கு: http://scpd.stanford.edu/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us