ஆர்த்தி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013) | Kalvimalar - News

ஆர்த்தி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)

எழுத்தின் அளவு :

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் மேல் நிலை பள்ளி மாணவி ஆர்த்தி 500க்கு 496 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடத்தையும், மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவி ஆர்த்தி நிருபர்களிடம் கூறியது: "விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் வசித்து வருகிறேன். எனது தந்தை வேல் முருகன் யூனியன் வங்கி கணக்காளராக உள்ளார். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 99, சமூகஅறிவியல் 100 மொத்தம் 500க்கு 496 மதிப்பெண் பெற்றேன்.

இந்த மதிப்பெண்ணை பெற நான் மிகவும் கஷ்டப்படவில்லை. டியூஷன் செல்லவில்லை. எனது வெற்றிக்கு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் எனது தாய் பெருந்தேவி துணையாக இருந்தனர். படிப்பு விஷயத்தில் எனது பெற்றோர்கள் வீட்டில் என்னை சுதந்திரமாக விட்டதால் தான் இந்த மதிபெண் பெற முடிந்தது.

பிளஸ் 2 கணினி துறையை தேர்வு செய்து, கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., கணிதத்தை தேர்வு செய்து மாணவர்களுக்கு கற்பிக்கும் பேராசிரியை ஆக விரும்புகிறேன். வருங்கால மாணவர்களும் என்னை போல் சுதந்திரமாக பயின்று தேர்வில் அதிக மதிபெண் பெற்று சாதிக்க வேண்டும்." இவ்வாறு மாணவி ஆர்த்தி கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us