ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்ருதி 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தில் தேர்ச்சி பெற்றார்.
மாணவி ஸ்ருதி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம்: தமிழ் 97, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100.
ஸ்ருதியின் தந்தை குமார். தனியார் கம்பெனியில் பொது மேலாளராக உள்ளார். தாய் வளர்மதி.
சாதனை குறித்து ஸ்ருதி கூறியது: "பெற்றோர்கள் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் மாநில அளவிலான ரேங்க் பெற உதவியாக இருந்தது. மாநில அளவில் ரேங்க் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன்.
வீட்டில் "டிவி" பார்க்க மாட்டேன். எனக்காக பெற்றோர்களும் "டிவி" பார்க்காமல் இருந்தனர். எதிர்காலத்தில் டாக்டருக்கு படிக்க உள்ளேன்." இவ்வாறு கூறினார்.