யு.கே.,வில் உயர்கல்வி -2 | Kalvimalar - News

யு.கே.,வில் உயர்கல்வி -2அக்டோபர் 10,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

விசா மையங்கள்:


உலகிலேயே யு.கே.,விற்கான அதிகமான விசா மையங்கள் இந்தியாவில் தான் உள்ளன. மொத்தம் 18 விசா மையங்கள் இங்கு உள்ளன. இவற்றில்  பெங்களூரு, புனே ஆகிய இரண்டு நகரங்களில் சூப்பர் பிரையாரிட்டி விசா மையம் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. இவைதவிர, டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் சூப்பர் பிரையாரிட்டி விசா மையங்கள் செயல்படுகின்றன. பிரையாரிட்டி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 5 நாட்களிலும், சூப்பர் பிரையாரிட்டி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 24 மணிநேரத்திலும் விசா வழங்கப்படுகிறது. இவற்றை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.



உதவித்தொகை:


பிரிட்டீஷ் அரசாங்கமும், பிரிட்டீஷ் கவுன்சிலும் இணைந்து பல்வேறு திட்டங்களின் வாயிலாக, 5 மில்லியன் பவுண்டுகள் தொகையை, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகின்றன. இவைதவிர, யு.கே., கல்வி நிறுவனங்கள் பிரத்யேகமாக, 13 மில்லியன் பவுண்டுகளை உதவித்தொகையாக மாணவர்களுக்கு நேரடியாக வழங்குகின்றன. இவை அனைத்தும் தகுதியான மற்றும் சிறந்த மாணவர்களை கவரும் வகையில் வழங்கப்படுகின்றன.



இந்தியாவை பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளில்  ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் படிப்புகளில் 162 உதவித்தொகைகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், 62 உதவித்தொகைகள் அதாவது 38 சதவீத உதவித்தொகை தென்னிந்திய மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் கிரேட் உதவித்தொகை திட்டத்தில், நாடு முழுவதும் 29 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 11 பேர் தென்னிந்திய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இவை தவிர, காமன்வெல்த் உதவித்தொகை, ஹார்ன்பை உதவித்தொகை, சார்ல்ஸ் வல்லஸ் இந்தியா டிர்ஸ்ட் உதவித்தொகை என பல்வேறு உதவித்தொகை திட்டங்களில் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இவை குறித்த முழுமையான தகவல்களுக்கு எனும் www.britishcouncil.in பிரிட்டிஷ் கவுன்சில் இணையதளத்தை பார்க்கலாம் அல்லது பிரிட்டிஷ் கவுன்சில் மையத்தை நேரடியாகவும் அணுகலாம். 



விண்ணப்பிக்கும் முறை: 


யு.கே.,வில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்கள் யுனிவர்சிட்டீஸ் அண்ட் காலேஜ்ஸ் அட்மிஷன்ஸ் சர்வீஸ் - யு.சி.ஏ.எஸ்., வாயிலாக விண்ணப்பிப்பது நல்லது. இதன்மூலம், யு.கே.,வில் உள்ள 395 நம்பகமான கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும்  52 ஆயிரம் படிப்புகளில், மாணவர்கள் அவர்களுக்கு பொருத்தமானவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். 



பிரிட்டிஷ் கவுன்சில்:


அதிகாரப்பூர்வ தகவல்களை வழங்கும் நோக்கில் மாணவர்களுக்கு அவ்வப்போது இன்பர்மேஷ்ன செஷன் மற்றும் ஸ்டடி யு.கே., எனும் கல்வி கண்காட்சியையும் நடத்துகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்ப பிரத்யேக ஆங்கில மொழி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான கட்டாய ஆங்கில மொழித் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுக்கும் பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி அளிக்கிறது.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us