ஆர்கிடெக்சர் படித்த மாணவர்களுக்கான ஜெர்மன் உதவித்தொகை | Kalvimalar - News

ஆர்கிடெக்சர் படித்த மாணவர்களுக்கான ஜெர்மன் உதவித்தொகைசெப்டம்பர் 19,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ கல்வி அமைப்பான டி.ஏ.ஏ.டி., சர்வதேச மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று, ஆர்கிடெக்சர் படித்த  மாணவர்களுக்கான உதவித்தொகை!


ஜெர்மனியில் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆர்கிடெக்சர் துறையில் முதுநிலை படிப்பு அல்லது துறை சார்ந்த இதர படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை விபரம்:

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, மாதம் 850 யூரோக்கள், போக்குவரத்து செலவீனம், காப்பீட்டு கட்டணம், மாதாந்திர வாடகை சலுகை, குடும்ப உறுப்பினர்களுக்கான மாதாந்தர செலவீனம் ஆகியவை வழங்கப்படும். 


உதவித்தொகை காலம்: 

10 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான கல்வி காலகட்டத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். 


தகுதிகள்:

ஆர்கிடெக்சர், இன்டீரியர் டிசைன், மொனுமண்ட் கன்சர்வேஷன், அர்பன் பிளானிங் / அர்பன் டெவலப்மென்ட், ரீஜினில் பிளானிங், லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர், லேன்ட்ஸ்கேப் பிளானிக் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை இளநிலை பட்டப்படிப்பாக படித்திருக்க வேண்டும். டோபல் / ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஆங்கில மொழி புலமை தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.


பட்டப்படிப்பிற்கான இறுதி தேர்வை எழுதியதில் இருந்து ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், ஜெர்மனியில் 15 மாதங்களுக்கும் மேல் தங்கியவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.


தேர்வு செய்யப்படும் முறை: 

ஜெர்மன் பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள் அடங்கிய டி.ஏ.ஏ.டி., சிறப்பு குழுவால் தகுதியான மாணவர்கள் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர். மாணவர்களின் திட்ட மாதிரிகள் மற்றும் விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த தேர்வு இருக்கும்.


விபரங்களுக்கு: daad.de/go/en/stipa57135744

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us